You are here

‘தொழிலாளர் தோழர்’ விருது

  • என்டியுசியின் ‘தொழிலாளர் தோழர்’ விருது பெற்ற கன்னியப்பன் சுப்பிரமணியன். படம்: என்டியுசி

ப. பாலசுப்பிரமணியம்

இடுகாடுகளில் அகழ்வுப் பணி களில் ஈடுபடுவது சுலபமான காரி யம் அல்ல. அப்பணியில் பல் லாண்டு காலமாக ஈடுபடுவதோடு சக ஊழியர்களின் பிரச்சினை களைச் செவிமடுத்து அதற்குத் தீர்வு காணப் பாடுபட்ட திரு கன்னியப்பன் சுப்பிரமணியனுக்கு நேற்று தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் ‘தொழிலாளர் தோழர்’ விருது அளித்து கெளரவித்தது. தொழிலாளர் தினத்தை முன் னிட்டு நேற்றிரவு நடந்த மே தின விருது நிகழ்ச்சியில் திரு சுப்பிர மணியன் உட்பட மொத்தம் 91 தனிநபர்களுக்கும் அமைப்புகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

ஒவ்வோர் ஆண்டும் தொழி லாளர் இயக்கத்திற்கு முக்கிய பங்களிப்பு தரும் தொழிற்சங்கத் தலைவர்கள், தனிநபர்கள், அமைப் புகள், முத்தரப்புப் பங்காளிகள் ஆகிய தரப்புகளுக்கு இவ்விருது நிகழ்ச்சியில் உயர்தர அங்கீகாரம் வழங்கப்படுகிறது. பொதுப்பணி நாட்சம்பள ஊழி யர்கள் ஒருங்கிணைப்பு தொழிற் சங்கத்தில் (AUPDRW) 1999ஆம் ஆண்டில் ஓர் உறுப்பினராகச் சேர்ந்து அச்சங்கத்தின் துணைத் தலைவராக 2011ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் திரு சுப்பிரமணியன்.