You are here

மாறுபட்ட கலைத் திறன்களை காட்சிப்படுத்திய இளையர்கள்

  • வீரத்தின் அடையாளமாகக் கண்களை மிகைப்படுத்தி மண்டலா வடிவங்களுடன் இணைத்து கண்ணகியின் ஓவியத்தை வரைந்த கலைவாணி முருகப்பன். படங்கள்: திமத்தி டேவிட்
  • ‘மின்னுக்’ எனும் கதகளி பெண் கதாபாத்திரப் படைப்பை சோகமான முகத்துடன் வரைந்தால் எப்படி இருக்கும் என்ற சுபா‌ஷினியின் (படம்) கற்பனையில் விளைந்ததே முதல் ஓவியம்.
  • புள்ளிகளால் வரையப்பட்ட ஸ்ரீ மாரியம்மன் கோயில், வண்ணமயமான கடை வீடுகள் ஆகியவற்றைக் காட்சிப்படுத்தி இருந்தார் அரவிந்த் ராஜ்.

யாஸ்மின் பேகம்

வித்தியாசமான சிந்தனைகொண்ட இளையர்கள் தங்களது எண்ணங்களைக் கலைப்படைப்புகளாக மாற்றும்போது அவை காண்போரை ஈர்ப்பதுடன் அவர்களது சிந்தனையையும் தூண்டும் விதத்தில் அமைகின்றன. உள்ளூர் இளையர்களுக்கு அத்தகைய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது அண்மையில் விக்டோரியா ஹாலில் நடைபெற்ற ‘சர்வேஷ் கலைத் திருவிழா’. 50க்கு மேற்பட்ட படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. படைப்பாளிகளில் மூவர் தங்களது கலைப் பயணம் குறித்து பகிர்ந்துகொண்டனர்.