You are here

பிறந்தநாளில் பார்சிலோனாவுக்கு பிரம்படி கொடுத்த பிஎஸ்ஜி

  • படம்: ராய்ட்டர்ஸ்

பாரிஸ் செயின்ட் ஜெர்மேன் (பி.எஸ்.ஜி.) குழுவின் நட்சத்திர ஆட்டக்காரர்களான டீ மரியா, கவானி ஆகியோர் தங்கள் பிறந்த நாளில் கோல் அடித்து குழுவின் வெற்றியை கொண்டாடினர். ‘சாம்பியன்ஸ் லீக் கடைசி 16’ சுற்றில், நேற்று சொந்த அரங்கில் காற்பந்து ஜாம்பவனான பார்சிலோனா குழுவை அது 4=0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காற்பந்து உலகில் அதிர்ச்சியை உண்டாக்கியது. ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் கிடைத்த ‘ஃப்ரி-கிக்’ வாய்ப்பை அற்புதமாகக் கோலாக்கினார் தனது 29வது பிறந்தநாளைக் கொண்டாடிய டீ மரியா.

முதல் பாதி ஆட்டம் முடிவ தற்குள், ஜெர்மானிய ஆட்டக்காரர் ஜூலியன் டிரெக்ஸ்லர் மற்றொரு கோலைப் புகுத்தி ஆட்ட நிலவரத்தை 2-0 என ஆக்கினார். பி.எஸ்.ஜி.யின் ஆதிக்கத்திற்கு பார்சிலோனாவுக்கு பதிலே இல்லை. இரண்டாம் பாதியில் மீண்டும் ‘பெனால்ட்டி’ எல்லைக்கு வெளியிலிருந்து லாவகமாக பந்தை வளைத்து கோலாக்கினார் டீ மரியா. இதற்கு பிறகு பார்சிலோனாவின் மெஸ்ஸியும் சக நட்சத்திரங்களும் அதிர்ச்சியில் தள்ளாட, அதிரடியாக பெனால்ட்டி எல்லையினுள் நுழைந்து இறுதிக் கோலை அடித் தார் தன் 30வது பிறந்தநாளைக் கொண்டாடிய கவானி.

தன் 29வது பிறந்தநாளைக் கொண்டாடிய பிஎஸ்ஜி ஆட்டக்காரர் டீ மரியா ஆட்டத்தில் இரண்டு அற்புதமான கோல்களைப் புகுத்தி தன் குழுவுக்கு வெற்றியைத் தேடித் தந்தார். படம்: ராய்ட்டர்ஸ்