You are here

வித்தியாசமான அனுபவம் வழங்கிய இசை நிகழ்ச்சி

  • படம்: திமத்தி டேவிட், செய்தி: சுதாஸகி ராமன்

கண்ணாடிச் சுவர்களுடைய பெரிய அறைக்குள் திரண்ட இளையர் கூட்டம்; நேரடியாக இசையைத் தயாரித்த மூன்று ‘டீஜேக்கள்’; ஹெட்ஃபோன்கள் எனப்படும் காது ஒலிப்பான்களின் உதவி யுடன், அருகில் இருப்போருக்குத் தொந்தரவின்றி, தங்களுக்குப் பிடித்தமான இசையைத் தேர்ந் தெடுத்து ஆடிப் பாடி மகிழ்ந்தனர் பங்கேற்பாளர்கள். ‘ஐ லைட் மரினா பே’ ஒளி கலைக் கண்காட்சித் தொகுப்பின் அங்கமாக அமைந்த ‘சைலண்ட் டிஸ்கோ’ இசை நிகழ்ச்சி பங்கேற்பாளர்களின் செவிகளுக் கும் கண்களுக்கும் நிகழ்ச்சிகள் விருந்தாய் அமைந்தன. மரினா பே வட்டாரத்தில் இம்மாத வார இறுதிகளில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தோழி நிஷாவுடன் ‘சைலன்ட் டிஸ்கோ’ நிகழ்ச்சியில் பங்கேற்ற வினிதா(வலது). படம்: திமத்தி டேவிட், செய்தி: சுதாஸகி ராமன்