You are here

மிதக்கும் மேடையில் மீண்டும் 2017 தேசிய தின அணிவகுப்பு

  •  படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ரவீணா சிவகுருநாதன்

இரண்டு ஆண்டு இடைவேளைக் குப் பின்னர், மீண்டும் மரினா பே மிதக்கும் மேடையில் நடக்கவிருக் கிறது இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்பு. இதன் மூலம் தேசிய தின அணிவகுப்புகளில் அதிக பிரபல மான வான்குடை சாகசம், துடிப் பான தற்காப்புக் காட்சி போன்ற பல சுவாரசியமான அங்கங்களைப் பொதுமக்கள் மீண்டும் கண்டு ரசிக்கலாம். இந்த ஆண்டின், ‘ஒரே தேச மாக ஒன்றுசேர்வோம்’ என்ற கருப் பொருள், வெவ்வேறு பின்னணி களைக் கொண்ட சிங்கப்பூரர்கள் ஒன்றாகச் சேர்ந்து, சமூக வலைத் தளங்களில் கலந்துகொள்ள தூண்டுதலாக அமைகிறது. தேசிய தின அணிவகுப்பின் கருப்பொருள், சின்னம், பாடல் ஆகியவற்றை நேற்று தேசிய தின அணிவகுப்பு ஏற்பாட்டுக் குழுவின் தலைவரான கர்னல் மெல்வின் ஓங் யோக் லாம் அறிவித்தார்.

2017 தேசிய தின அணிவகுப்பு ஏற்பாட்டுக் குழு தலைவர் கர்னல் மெல்வின் ஓங்கும் (இடது), கருப்பொருள் பாடலாசிரியரும் பாடகருமான ஜே லிம்மும் இவ்வாண்டு தேசிய நாள் அணிவகுப்புச் சின்னத்துடன் நிற்கின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்