You are here

‘அமைதி, நல்லிணக்கத்தை அடுத்த தலைமுறையினருக்கும் போதிக்க வேண்டும்’

  • படம்: சூலியா பள்ளிவாசல்

சுதாஸகி ராமன்

பல ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரிலும் அருகில் உள்ள நாடுகளிலும் மூண்ட வன்முறைச் சம்பவங்களை நேரடியாகப் பார்த்த நமது முன்னோடித் தலைமுறையினர் சிங்கப்பூரில் இனி அனைவரும் அமைதியுடனும் நல்லிணக் கத்துடனும் வாழவேண்டும் என்று முடிவெடுத்தனர். இந்த நிலைப்பாடு நமது அடுத்து தலைமுறையினரையும் சென்றடைய வேண்டும் என்று துணைப் பிரதமர் திரு டியோ சீ ஹியன் தெரிவித்துள்ளார். சவுத் பிரிட்ஜ் சாலையில் அமைந்துள்ள சூலியா பள்ளி வாசலில் நேற்று நடைபெற்ற நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் திரு டியோ கலந்துகொண்டார்.

பள்ளிவாசல் தலைவர்கள் செய்துவரும் சிறந்த பணிகள் சிங்கப்பூரில் அமைதியும் நல்லி ணக்கமும் நிலவுவதற்குக் காரணமாக உள்ளதாக அவர் பாராட்டினார். ‚ “பல்லின, பல சமயங்களைக் கொண்ட சிங்கப்பூருக்கு ஏற்ற வாறு சமயப் போதனைகளை நெறிப்படுத்துகிறோம்,” என்றார் அவர். நோன்பு திறப்பதற்காகப் பள்ளிவாசலுக்கு வந்திருந்த முஸ்லிம்கள், சமூகத் தலை வர்கள் ஆகியோருடன் கூடி துணைப் பிரதமர் உணவருந் தினார்.

சூலியா பள்ளிவாசலில் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட துணைப் பிரதமர் டியோ சீ ஹியன். படம்: சூலியா பள்ளிவாசல்