You are here

ஒரே கூரையின்கீழ் பல்வேறு சேவைகளை வழங்கும் புதிய தெம்பனிஸ் மையம்

அவர் தெம்பனிஸ் ஹப்’பை பிரதமர் லீ சியன் லூங் நேற்று அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார். புதிய மையத்தில் 5,000 பேர் அமரக்கூடிய விளையாட்டரங்கம், ஆறு நீச்சல் குளங்கள், தெம்ப னிஸ் வட்டாரத்திலேயே குழந்தை களுக்கான ஆகப் பெரிய விளை யாட்டு மைதானம், நான்கு டென்னிஸ் மைதானங்கள், இரண்டு ஃபுட்சால் மைதானங் கள், ஒரு ஹாக்கி மைதானம் ஆகியவை இடம்பெறுகின்றன.

அதுமட்டுமல்லாது, மையத் தில் உள்ள 24 மணி நேர பொதுச் சேவை நிலையத்தில் 12 அரசாங்க அமைப்புகளின் சேவைகளைப் பொதுமக்கள் பெறலாம். 400 பேர் அமர்ந்து திரைப் படங்களையும் கலை நிகழ்ச்சி களையும் பார்க்க ஏதுவாக கலையரங்கம் ஒன்றும் கட்டப் பட்டுள்ளது. ஐந்து மாடிகள் கொண்ட தெம்பனிஸ் வட்டார நூலகமும் மையத்துக்கு பொதுமக்களை ஈர்க்கும் என்று பெரிதும் எதிர் பார்க்கப்படுகிறது. நேற்று ஏறத்தாழ 100,000 பேர் மையத்துக்கு வருகை புரிந்து திறப்பு விழாவில் கொண்டாடினர்.

தெம்பனிஸ் மையத்தைத் திறந்து வைத்த பிரதமர் லீ, மையத்தில் பல்வகை சேவைகள் வழங்கப்படுகின்றன. கடைகளும் உள்ளன என்று தெரிவித்தார்.

“வேலை முடிந்து வீடு திரும்பும் குடியிருப்பாளர்கள் தங்களுக்கு வேண்டியவற்றை இங்கிருந்து வாங்கிக் கொள்ள லாம். குடியிருப்பாளர்களின் கருத்துகளைக் கேட்டு அறிந்து இந்த மையத்தைக் கட்டினோம். அரசாங்கம் புதியவற்றை செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது. புதியவற்றைச் செய்யும்போது ஏற்கெனவே செய்ததைவிட மேலும் சிறப்பாகச் செய்ய முயற்சி செய்கிறோம். கிடைத்த அனுபவம் மூலம் கற்றுக்கொள்வதையும் மேம்படுவதையும் நாங்கள் தொடர்வோம்,” என்றார் பிரதமர் லீ.

‘அவர் தெம்பனிஸ் ஹப்’பில் பிரதமர் லீ (இடது). படம்: சாவ்பாவ்