You are here

கொண்டாட்டத்தை முன்னிட்டு புதிய சூ‌ஷி வகையை உருவாக்கிய ராம் குழுவினர்

  • செய்தி: ரவீணா சிவகுருநாதன் படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், மாகி சான் நிறுவனம்

ஸ்பெக்ட்ரா உயர்நிலைப்பள்ளி யைச் சேர்ந்த ராம் நாயுடு சீனிவாசகன், 14, தனது நண்பர் களுடன் இணைந்து தேசிய தினக் கொண்டாட்டத்தை முன் னிட்டு ‘சூ‌ஷி’ உணவு வகை ஒன்றை உருவாக்கியுள்ளார். பள்ளியின் சமையற்கலைச் சங்கத்தில் இருக்கும் இம் மாணவர்கள், சென்ற ஆண்டு சிங்கப்பூர் அறிவாலயம் ஏற்பாடு செய்திருந்த இளம் தொழில் முனைவர் போட்டியில் ‘லக்சா’, ‘ஓட்டா’, ‘கோழி சார் சியூ சூ‌ஷி’யை உருவாக்கியதற்காக மூன்றாம் பரிசை வென்றிருந்தனர். அதனைத் தொடர்ந்து ஸ்பெக்ட்ரா உயர்நிலைப் பள்ளி, ‘மாகி சான்’ என்ற உள்ளூர் சூ‌ஷி உணவகத்துடன் தொடர்பு கொண்டு கூட்டணி ஏற்படுத்த முனைந்தது. இம்மாணவர்கள் உருவாக்கிய இந்த சிங்கப்பூர் தேசிய தின சிறப்பு சூ‌ஷி சுருள், கோழி சார் சியூ, முட்டை, வெள்ளரிக்காய், வறுத்த வெங்காயம், ‘கொத்த மல்லி மையோனைஸ்’ போன்ற மூலப்பொருட்களைக் கொண்டு செய்யப்படுகிறது.

சிங்கப்பூர் தேசிய தின சிறப்பு சூ‌ஷி உணவு வகையை (வலது) உருவாக்கிய ஸ்பெக்ட்ரா உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் (இடமிருந்து) டயானா சையாஃபிகா, லியூ சி ருய், ராம் நாயுடு சீனிவாசகன்.

செய்தி: ரவீணா சிவகுருநாதன் படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், மாகி சான் நிறுவனம்