You are here

தேசிய தினப் பேரணி உரை 2017: நீரிழிவு - இந்தியர்களின் சுகாதார நெருக்கடி

  • படம்: தொடர்பு, தகவல் அமைச்சு

பயங்கரவாதத்துக்கு எதிராகச் செயல்படுதல், நாட்டின் இன நல் லிணக்கத்தை வலுப்படுத்துதல், பெரிய, சிறிய நாடுகளுடன் நமது நட்புணர்வை மேம்படுத்துதல், ஸ்கில்ஸ்ஃபியூச்சர் எனும் வருங் காலத் திறன் வளர்ச்சித் திட்டம் மூலம் ஊழியர்களுக்கு மறுபயிற்சி அளித்து அவர்கள் தங்களது வேலைகளைத் தக்கவைத்துக் கொள்ள உதவுதல் என்று அரசாங் கத்துக்கு உள்ள உடனடி முன்னு ரிமைகள் தொடர்ந்து செயல்படுத் தப்பட்டு வருகின்றன. இவ்வேளையில், இக்கால, எதிர்கால சிங்கப்பூரர்களின் நல் வாழ்வை மேம்படுத்த மூன்று முக் கிய அம்சங்களில் நாம் மிகுந்த அக்கறை காட்டவேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் தமது 14வது தேசிய தினப் பேரணி உரையில் தெரிவித்தார். அங் மோ கியோவில் உள்ள தொழில்நுட்பக் கல்விக் கழக மத்திய கல்லூரி அரங்கில் நேற் றிரவு மலாய், மாண்டரின், ஆங் கிலம் ஆகிய மூன்று மொழிகளில் உரையாற்றிய திரு லீ, ஆரம்பகால கல்வித் துறையை வளர்த்தல், நீரிழிவுக்கு எதிரான போராட்டத் தில் தீவிர அக்கறை செலுத்துதல், ஓர் அறிவார்ந்த தேசமாக சிங்கப் பூரை உருவாக்குதல் ஆகிய வையே அந்த மூன்று அம்சங்கள் என்று விவரித்தார்.

இவ்வாண்டு தேசிய தினச் செய்தியிலும் இம்மூன்று அம்சங் களைப் பிரதமர் லீ குறிப்பிட்டு இருந்தார். “ஆரம்பகாலக் கல்வித் துறையை மேம்படுத்துவது மூலம் ஒவ்வொரு பிள்ளைக்கும், அவர் எந்தப் பின்னணியைக் கொண்ட வராக இருந்தாலும் ஓர் ஒளிமய மான எதிர்காலம் அமைய வழி ஏற்படுகிறது.

அண்மையில் பொங்கோல் வியூவில் உள்ள கல்வி அமைச்சின் பாலர் பள்ளிக்குச் சென்ற பிரதமர் லீ சியன் லூங்கை வணக்கம் செலுத்தி வரவேற்ற பிள்ளைகள். உடன் அப்பள்ளியின் தமிழாசிரியை அடைக்கப்பன் வள்ளியம்மை. தமது தேசிய தினப் பேரணி உரையில் ஆரம்பகால கல்வித் துறையை மேம்படுத்துவது குறித்து பிரதமர் பேசினார். படம்: தொடர்பு, தகவல் அமைச்சு