மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‘துப்பறிவாளன்’ படம் குறித்து தொடர்ந்து புதுப்புது தகவல்கள் வெளியாகும் வண்ணம் உள்ளன. இந்நிலையில், இப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளனவாம். சமூக வலைத்தளங்களில் அந்த முன்னோட்டக் காட்சிகளை ஏராளமானோர் பகிர்ந்து வருகின்றனர். ‘துப்பறிவாளன்’ படத்தில் அறிவுபூர்வமான துப்பறியும் காட்சிகள், அசர வைக்கும் சண்டைக் காட்சிகள், அழகான காதல் எனப் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாகக் கேள்வி. இதை முன்னோட்டக் காட்சிகளில் இலேசாகக் கோடிட்டுக் காட்டி உள்ளார் மிஷ்கின். இதுதான் ரசிகர்கள் உற்சாகம் அடையக் காரணம் எனக் கூறப்படுகிறது. இப்படத்தில் அனு இமானுவேல், பிரசன்னா, வினய், கே.பாக்யராஜ், சிம்ரன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் தமது திரை வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும் என்று தொடர்ந்து சொல்லி வருகிறார் விஷால்.
You are here
ரசிகர்களை ஈர்த்த முன்னோட்ட காட்சி
12
Sep
2017