சிட்னி: ஆஸ்திரேலியப் பிரதமர் டர்ன்புல், ‘பீரு’ம் கையுமாக பேத்தியைக் கொஞ்சியப் புகைப் படம் ஊடகங்களில் பரவி சர்ச் சையை கிளப்பியிருக்கிறது. திரு டர்ன்புல் தமது பேத்தி யுடன் இருந்த புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவேற்றினார். சிட்னியில் உள்ள காற்பந்து அரங்கில் உட்கார்ந்திருந்த அவ ரது கையில் பியரும் இருந்தது. இந்தப் புகைப்படத்துக்கு ‘காற் பந்துத் திடலில் பல வேலைகளுடன் உள்ளார்’ என்று குறிப்பும் எழுதப் பட்டிருந்தது. ஆனால் திரு டர்ன்புல் பியருடன் இருந்ததை பலர் கடுமையாக விமர்சித்துள் ளனர். “குழந்தையுடன் பீரையும் வைத்திருப்பது அவமானம்,” என்று மார்க் வாக்கர் என்பவர் ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார். இப்படி கண்டனங்கள் கிளம் பிய வேளையில் அவருக்கு ஆதர வாகவும் விமர்சனங்கள் குவிந்தன. பிரதமர் டர்ன்புல் ஏதும் தவறு செய்யவில்லை என ஆஸ்திரேலியர் கள் பலர் தற்காத்து விமர்சனங் களை பதிவு செய்தனர். “என்ன அழகான புகைப்படம், திரு டர்ன்புல்லுக்குப் பேரக் குழந்தையுடன் நேரத்தை மகிழ்ச்சி யாக செலவிட அனைத்து உரிமைகளும் உள்ளன,” என்று ஜான் ராபர்ட்சன் என்பவர் தெரிவித்திருந்தார்.
You are here
சர்ச்சையை கிளப்பிய ஆஸ்திரேலிய பிரதமரின் அழகிய குழந்தையின் புகைப்படம்
12
Sep
2017