You are here

‘நிலச் சொத்துத் துறையில் மின்னிலக்கப் புத்தாக்கம்’

  • PHOTO: MINISTRY OF NATIONAL DEVELOPMENT

ஆசியான் நாடுகளின் மதிப்பீட்டாளர்களும் பங்குதாரர்களும் நிலச்சொத்து துறையில் மின் னிலக்கப் புத்தாக்கத்தைக் கொண்டு இயங்க வேண்டும் என தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார். மற்ற நாடுகளில் இருக்கும் மின்னிலக்கப் புத்தாக்கத்தை எதிர்கொள்ள ஓர் உரு மாற்றத்தைச் செய்ய வேண்டும். மதிப்பீட்டாளர்களுக்கு வணி கம், அறிவார்ந்த சொத்து மதிப் பீடு போன்ற வேறு துறைகளிலும் நல்ல வாய்ப்புகள் இருப்பதாக குட்வுட் பார்க் ஹோட்டலில் நடந்த ஆசியான் மதிப்பீட்டாளர்கள் மாநாடு அவர் தெரிவித்தார். பயணம், ஊடகம் சார்ந்த துறைகள் பாதிப்படைந்தது போல் இந்தத் துறை மின்னிலக்கப் புத்தாக்கத்தால் பாதிப்படைய வில்லை. கனடா நாட்டை எடுத்துக் காட்டாகப் பேசியவர், அங்கு உள்ள தொழில்நுட்பப் பயன்பாடு, நிலச்சொத்து தொடர்பான தகவல் கள் தானியக்க முறையில் பகிரப் படுவதைச் சுட்டிக் காட்டினார். அறிவார்ந்த சொத்து, சேவை ஒப்பந்தம், தனியுடைமைத் தரவுகள் போன்ற சேவைகள் பல ஆசியான் நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முக்கியப் பங்கு உண்டு எனவும் தெரிவித்தார்.