You are here

தினகரன்: தமிழகத்தில் நடக்கும் துரோக ஆட்சி அகற்றப்படும்

மதுரை: தமிழகத்தில் தற்போது நடப்பது ஜெயலலிதாவின் ஆட்சி யல்ல என்றும் நடப்பது முதல்வர் பழனிசாமியின் துரோக ஆட்சி என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்துள்ள நிலையில், தினகரன் ஆவேசத்துடன் கூறி யுள்ள பல கருத்துகள் அதிமுக வினர் மத்தியில் பரபரப்பையும் புதிய விவாதங்களையும் எழுப்பி உள்ளன. அதிமுக அரசை, நடப்பு ஆட்சியை வீட்டுக்கு அனுப்பத் தயாராகிவிட்டதாக நேற்று முன் தினம் மதுரையில் செய்தியாளர்க ளிடம் பேசியபோது தினகரன் குறிப்பிட்டார். துரோகம், சுயநல எண்ணம் கொண்டவர்களால் மக்களுக்கு எந்த வகையிலும் நல்லது செய்ய முடியாது என்று குறிப்பிட்ட அவர், முதல்வர் பழனிசாமி மக்கள் விரோத ஆட்சியைத்தான் நடத்திக்கொண்டிருப்பதாக காட் டத்துடன் விமர்சித்தார்.

“இது ஜெயலலிதாவின் ஆட் சியல்ல, எடப்பாடி பழனிசாமியின் துரோக ஆட்சி. இந்த மக்கள் விரோத ஆட்சியை அகற்ற நாங் கள் தயாராகிவிட்டோம். “தர்ம யுத்தம் என்று கூறிக் கொண்டு துணை முதல்வர் பதவியைப் பெற்றவர் பன்னீர் செல்வம். பதவி இல்லையென்றால் பன்னீர்செல்வத்திற்குத் தூக்கமே வராது,” என்றார் தினகரன். முதல்வர் பழனிசாமி, ஓபிஎஸ் தரப்பைச் சேர்ந்தவர்கள் தமிழக மக்களை ஏமாற்றி ஆட்சி நடத்தி வருவதாகவும் எடப்பாடி பழனி சாமி முதல்வராக நீடிப்பது தமிழகத்திற்கு நல்லதில்லை என் றும் தினகரன் தெரிவித்தார். “முதல்வரை மாற்ற நாங்கள் தயாராகிவிட்டோம். எடப்பாடி பழனிசாமியை மாற்றுவோம் அல் லது இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துவிட்டோம். தலையைக் கிள்ள முயற்சிப்போம்; இல்லையென்றால் ஆட்சியைத் தூக்கி எறிவோம்,” என்று தினகரன் ஆவேசத்துடன் கூறினார். இதற்கிடையே அவரது ஆதர வாளர்களும் முதல்வர், துணை முதல்வர் ஆகிய இருவரையும் மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.