You are here

சுத்தமான நெய்யை கண்டுபிடிக்கும் வழிகள்

இன்னும் சில வாரங்களில் தீபாவளித் திருநாள் வரவுள் ளது. தீபாவளி என்றால் வித விதமான பலகாரங்களுக்கு பஞ்சமிருக்காது. இதில் நெய் உருண்டை, நெய் முறுக்கு, நெய் ஊறும் அல்வா என நெய்யில் தயாராகும் பலவித மான பலகாரங்களும் அடங்கும். இந்தப் பலகாரங்களை செய்ய நாம் பயன்படுத்தும் நெய் சுத்தமானது தானா என்பதைக் கண்டுபிடிக்க இரு வழிமுறைகளைப் பின்பற்றலாம். சுத்தமான நெய் என்பது அறை வெப்பநிலையில் உருகும் தன்மை கொண்டது. எனவே, சிறிது நெய்யை எடுத்து உள்ளங்கையில் விட்டு சற்றுநேரம் வரை வைத்திருங் கள். சிறிது நேரத்திலேயே உள்ளங்கையில் வைக்கப்பட்ட நெய் உருகிவிட்டால் அது சுத்தமான நெய். இரண்டாவதாக, நெய்யை ஒரு வாணலியில் வைத்துச் சூடு படுத்தும்போது அது உருகி பழுப்பு நிறமாக மாறினால் அது சுத்தமான நெய். அதனைத் தவிர்த்து கால தாமதமாக உருகி, மஞ்சள் நிறமாக மாறினால் அது கலப்படமான நெய்.