You are here

தாய்லாந்தில் இனிப்பு அதிகமுள்ள பானங்களின் விலை கூடுகிறது

பேங்காக்: தாய்லாந்து அரசாங்கம் புதிய வரி விதிப்பை அமலாக்கியிருக்கிறது. இதனால் சில குறிப்பிட்ட பொருட் களின் விலைகள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இப்புதிய வரி விதிப்பின் மூலம் 12 பில்லியன் பாட் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பது அந்நாட்டின் வருமான வரித்துறையின் எதிர்பார்ப்பாகும்.

மதுபானம், இனிப்பு அதிகமுள்ள பானங்கள், சிகரெட்டுகள் ஆகியவற்றின் விலைகள் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கும் என்று வரித்துறையின் தலைமை இயக்குநர் சோம்சாய் பூல்சாவஸ்டி தெரிவித்தார்.