You are here

தொலைபேசி அழைப்பு மோசடிகளை முறியடித்த மூவருக்கு போலிஸ் பாராட்டு விருது

  • குமாரி லி ஃபாங், குமாரி நொவியாந்தி, திரு சமீர் மாலிக். படம்: சாவ் பாப்

தொலைபேசி அழைப்பு மோசடிகளை முறியடித்த மூன்று பேருக்கு நேற்று போலிசின் பாராட்டு விருதுகள் வழங்கப்பட்டன. குமாரி நொவியாந்தி, திரு சமீர் மாலிக், குமாரி லி ஃபாங் ஆகியோர் அவ்விருதுகளைப் பெற்றனர். இம்மாதம் 8ஆம் தேதி, குமாரி நொவியாந்தியும் திரு சமீர் மாலிக்கும் பணிபுரியும் பணமாற்று சேவைக் கடைக்கு வந்த 75 வயது மூதாட்டி ஒருவர், சீனாவில் உள்ள தமது பேத்தியின் வங்கிக் கணக் குக்கு $40,000 அனுப்பும்படி கூறி னார். அந்த மூதாட்டியுடன் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்திருந்தார். அவர் தன்னை மூதாட்டியின் மகள் எனக் கூறிக் கொண்டு நொவியாந்தியின் கேள் விகளுக்கு மூதாட்டிக்குப் பதில் அவரே விடையளித்தார். முதலில் மகள் என்று கூறிய அந்தப் பெண், பின்னர் உறவுமுறையில் மூதாட் டிக்கு நான் ‘மகள் முறை’ என்றார்.

அந்தப் பெண் முன்னுக்குப்பின் முரணாகப் பேசினார். பீப்பிள்ஸ்பார்க்கில் உள்ள அந்தக் கடையின் மேலாளரான நொவியாந்திக்கு அந்தப் பெண் மீது சந்தேகம் எழுந்தது. அந்தப் பெண்ணுடைய அடையாள அட்டையை வாங்கிப் பார்த்ததில் அவர் சீனாவில் பிறந்தவர் என்பது தெரியவந்தது. குமாரி நொவி யாந்தி அடுக்கடுக்காய் கேள்வி கேட்டதால் எரிச்சலடைந்த அந்தப் பெண், வேறு கடைக்குச் செல்ல முயன்றார். அவருடனான வியா பாரத்தை விடுவதற்கு விரும்பாத வரைப் போல் நடித்த நொவியாந்தி, தனது சக ஊழியரின் உதவியால் போலி சுக்குத் தகவல் கொடுத்தார். போலிஸ் விசாரணையில் அந்தப் பெண் தொலைபேசி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

குமாரி லி ஃபாங், குமாரி நொவியாந்தி, திரு சமீர் மாலிக். படம்: சாவ் பாப்