You are here

தமிழ்ச் சொல்லை முன்னிறுத்தும் ‘அறம்’ சிங்கப்பூர் எழுத்தாளர் விழா

  • படம்: டாக்டர் பாரதி திருமகன்

நவீன இசையில் அரங்கேறும் கவி தைகள், பாரம்பரிய முறையில் படைக்கப்படும் கதைகளுடன் மாறுபட்ட படைப்பிலக்கிய அனு பவத்தைத் தரும் இந்த ஆண்டின் சிங்கப்பூர் எழுத்தாளர் விழா. முதல்முறையாக ‘அறம்’ என்ற தமிழ்ச் சொல்லைக் கருப்பொரு ளாகக்கொண்டு ஏற்பாடு செய்யப் பட்டுள்ள இந்த ஆண்டு விழாவில் தமிழ் முரசு நாளிதழும் இணைந் துள்ளது. ‘கவிதைகளின் அடிநாதம்: இசையின் தத்துவம்’ என்ற தலைப் பில் ‘ராக்’ (Rock), ‘ஜாஸ்’ (Jazz) போன்ற நவீன மேற்கத்திய இசை யில் மேடையேறவுள்ள தமிழ்க் கவிதை வாசிப்பு தமிழ் முரசு படைக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று.

விழாவின் தொடக்க நிகழ்ச்சி யாக நவம்பர் 3ஆம் தேதியன்று ‘ஆர்ட்ஸ் ஹவுஸி’ல் இரவு 8 மணிக்கு நடக்கும் இந்நிகழ்ச்சி யில் பாரதியார், பாரதிதாசன் கவி தைகளுடன் சிங்கப்பூரின் மூத்த தமிழ்க் கவிஞர்கள், வளரும் கவி ஞர்களின் கவிதைகளை ‘ராகா ஜாஸ்’, ‘பாக்ஸ்சைல்ட்’ ஆகிய இளைய இசைக் குழுக்கள் மேடை யில் வாசித்தும் பாடியும் மகிழ்வூட் டும். இளையர்களின் தமிழ்மொழிப் புலமையையும் ஈடுபாட்டையும் இந்த நிகழ்ச்சி எடுத்துக்காட்டும் என்றார் ‘பாக்ஸ்சைல்ட்’ இசைக் குழுவின் முன்னணிப் பாடகரான ஜீவா குலரெத்தினம், 24.

பத்து நாட்களுக்கு நடை பெறும் சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் நடைபெறும் பெரும் பாலான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள விழா அனுமதி அட்டையை (Festival Pass) $25க்கு பெற்றுக்கொள்ளலாம். அந்த அட்டையுடன் இம்மாதம் 30ஆம் தேதி வரை வாங்கப்படும் எல்லா நுழைவுச் சீட்டுகளுக்கும் 20% வரை தள்ளுபடி உண்டு. விழா அனுமதி அட்டை யுடன் (Festival Pass) தமிழ் முரசின் நிகழ்ச்சிகள் உட்பட ஏனைய கட்டண நிகழ்ச்சி களுக்கான நுழைவுச் சீட்டுகளை வாங்கினால் சிறப்புக் கழிவு உண்டு. நவம்பர் 3ஆம் தேதி நடைபெறும் ‘கவிதைகளின் அடிநாதம்:

இசையின் கவித் துவம்’ நிகழ்ச்சிக்கான கட்ட ணம் $10. விழா அனுமதி அட்டையுடன் சேர்த்து வாங் கினால் $8ஆக குறையும். மாணவர்கள், முழுநேர தேசிய சேவையாளர், 55 வயதுக்கு மேற்பட்ட மூத்தோர் ஆகியோருக்கு 20% வரை கழிவு வழங்கப்படுகிறது. 4ஆம் தேதி நடைபெறும் ‘நாட்டுப்புறக் கலை வளர்க் கும் கதை மரபு’ நிகழ்ச்சிக் கான கட்டணம் $20. மாணவர்கள், மூத்தோர், முழுநேர தேசிய சேவையாளர் ஆகியோர் விழா அனுமதி அட்டையுடன் இந்நிகழ்ச்சிக் கான நுழைவுச்சீட்டை மேற்குறிப்பிட்ட கழிவுகளுடன் இம்மாதம் 30ஆம் தேதிக்குள் குறைந்த கட்டணத்தில் வாங்கலாம். நுழைவுச்சீட்டுகள் தொடர்பான மேல்விவரங் களுக்கு www.sistic.com.sg அல்லது www.peatix.com ஆகிய இணையத் தளங்களை நாடலாம்.

புகழ்பெற்ற வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகத்தின் புதல்வி டாக்டர் பாரதி திருமகன் தமது புதல்வர் கலைமகனுடன் (இடமிருந்து இரண்டாவது). படம்: டாக்டர் பாரதி திருமகன்