You are here

இசைக் கலைஞர்களோடு பணியாற்றும் வாய்ப்புப் பெற்ற ஷோன்

  • 31 வயது ஷோன் வால்டர் கமோ வன்ஸ்

அதிவேக கார் பந்தயமான ஃபார்முலா 1 சிங்கப்பூர் கிராண்ட் ப்ரீ என்றாலே பந்தய வாகனங்கள் ஓய்ந்த பிறகு நினை வுக்கு வருவது ஒலி, ஒளி சாகசங்கள், வாணவேடிக்கை நிறைந்த இசை நிகழ்ச்சிகளும் கலை நிகழ்ச்சிகளும் தான். எட்டு ஆண்டுகளாக சிங்கப்பூர் கிராண்ட் ப்ரீ இசை, கலை நிகழ்ச்சிகளின் திரைக்குப் பின்னால் இசைக் குழுக்களுக்கும் க லை ஞ ர் க ளு க் கு ம் தேவையான ஏற்பாடு களை நிறைவு செய் யும் பரபரப்பான பணியில் ஈடுபட்டு வருகிறார் 31 வயது ஷோன் வால்டர் கமோ வன்ஸ். முழு நேர நிகழ்வுகள் ஏற்பாட்டுத் துறையில் பணியாற்றும் அவர், ஃபார்முலா 1 சிங்கப்பூர் கிராண்ட் ப்ரீ (எஃப்1) கார்ப்பந்தயம் நடைபெற்ற பாடாங் மேடை இருக்கும் வளாகத்தின் நிர்வாகியாக இவ்வாண்டு பொறுப்பு ஏற்றார்.

உபசரிப்புக் குழு, பாதுகாப்பு அதிகாரிகள், போக்குவரத்துக் குழு, மேடையில் இருக்கும் ஒலி நிபுணர்கள், மேடை மேலாளர்கள் ஆகியோரை ஒருங்கிணைப்பதோடு அவசரகால நெருக்கடிகளிலும் இறுக்கமான சூழ்நிலைகளிலும் என்ன செய்ய வேண்டும் எனத் தீர்மானிக்கும் சவால் மிகுந்த அவரது பணியின் அனு பவங்களைத் தமிழ் முரசிடம் பகிர்ந்து கொண்டார் ஷோன். கலைஞர்களின் பலதரப்பட்ட உணவு, பானத் தேவைகள் முதல் கனத்த மழை யின்போது குடைகளைத் தயாராக கொண்டு வரும் மாற்றுத் திட்டங்கள் வரை கையாளும் மிகவும் முக்கியமான பொறுப்பை இன்முகத்துடன் ஏற்றுக் கொண்டார் அவர்.