You are here

நீர்க்குழாய் உடைப்பு; ஒரு வாரத்தில் 2வது சம்பவம்

புக்கிட் பாத்தோக் சென்ட்ரல் புளோக் 222, 223க்கு அருகே நேற்றுக் காலை தண்ணீர்க் குழாய் ஒன்று உடைந்ததில் பல மீட்டர் உயரத்திற்கு நீர் பீய்ச்சியடித்தது. புல்தரை வழியாகச் செல்லும் அந்த பிரதான தண்ணீர்க் குழாயில் ஏற்பட்ட உடைப்பு பற்றி தகவல் கிடைத்ததாகப் பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்தது. அந்த உடைப்பு தனது உணர் கருவிகளாலும் கண்டுபிடிக்கப் பட்டதாகக் கழகம் குறிப்பிட்டது. உடனடியாக தனது அதிகாரி களையும் பழுதுபார்ப்பு ஒப்பந்த தாரர்களையும் சம்பவ இடத்திற்கு அனுப்பிய கழகம், காலை 9 மணி அளவில் நீர்க்கசிவு நிறுத்தப்பட்ட தாகத் தெரிவித்தது.

“பழுதுபார்ப்புப் பணிகள் தொடர் கின்றன. இன்றைக்குள் (நேற்றைக் குள்) அந்தப் பணிகள் நிறைவடை யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாலைகள் எதுவும் மூடப்பட வில்லை. போக்குவரத்து சீராக உள்ளது,” என்று கழகம் கூறியது. அத்துடன், நீர் விநியோகத்தில் எந்தப் பாதிப்பும் இருக்காது என்று வாடிக்கையாளர்களுக்கு உறுதி அளித்த கழகம், உடைப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வரு வதாகவும் சொன்னது. இப்படி புக்கிட் பாத்தோக் வட் டாரத்தில் தண்ணீர்க் குழாய் உடைந்து நீர் வெளியேறியது ஒரு வாரத்தில் இது 2வது சம்பவம். புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 6, புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 8 சந்திப்பில் கடந்த வாரம் தண்ணீர்க் குழாய் ஒன்றில் ஏற்பட்ட உடைப்பு காரண மாக ‘நீரூற்று’ போன்று தண்ணீர் வெளியேறியது. இருப்பினும், அதற் கும் நேற்றைய சம்பவத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கழகம் தெளிவுபடுத்தியது.

தண்ணீர்க் கசிவால் வாடிக்கையாளர்களுக்கான நீர் விநியோகத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று பொதுப் பயனீட்டுக் கழகம் உறுதியளித்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்