You are here

‘அமெரிக்க வரலாற்றில் மோசமான தாக்குதல்’

லாஸ் வேகாஸ் ஸ்ட்ரிப் பகுதியில் நடைபெற்ற இசைக் கச்சேரியில் குழுமியிருந்தவர்கள் மீது நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 50க்கும் மேற்பட்டோர் பலியான தாகவும் 400க்கும் அதிக மானோர் காயமுற்றதாகவும் போலிசாரும் அமெரிக்க ஊட கங்களும் செய்தி வெளியிட்டு உள்ளன. விடுதி ஒன்றின் 32வது மாடியிலிருந்து இசைக் கச்சேரி யில் இருந்தவர்களை நோக்கி 10 நிமிடங்களுக்கு மேலாக துப்பாக்கி மழை பொழிந்த அந்த ஆடவர், போலிசார் சூழ்ந்ததும் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டான் என்று போலிசார் கூறினார். அவனது அறையில் 10க்கு மேற்பட்ட துப்பாக்கிகள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்க வரலாற்றிலேயே ஆக அதிகமானோர் கொல்லப் பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்ப வம் என இது குறிப்பிடப் பட்டுள்ளது.

இசைக் கச்சேரியை ரசித்துக்கொண்டிருந்தவர்கள் துப்பாக்கிச்சூட்டுச் சத்தம் கேட்டதும் அங்கிருந்து சுவரேறி தப்பிக்க முயன்றனர். படம்: ஏஎஃப்பி