You are here

சினேகன்: பாசத்தின் வெளிப்பாடு கண்ணீர்

  • தனது தந்தையுடன் திரைப்பட பாடலாசிரியர் சினேகன்.

பாசத்தைக் கண்ணீரின் மூலமாகத் தான் வெளிப்படுத்த முடியும் என திரைப்படப் பாடலாசிரியர் சினேகன் தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண் டாம் இடத்தைப் பிடித்துள்ள அவர், அந்த நிகழ்ச்சி முடிந்தபின்னர் காணொளிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அன்பின் வெளிப்பாடாகவே பிறரைத் தாம் அரவணைப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். “சினேகன் கட்டிப் பிடிப்பதற் காகவே உள்ளே சென்றிருக்கிறான் என்று சொன்னீர்கள். ஒன்று தெரியுமா-? ஒரு பெண்ணைத் தொடுவதற்குக் கூட, அந்தப் பெண் நம் மீது நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். அப் போதுதான் நெருங்கி வர முடியும். அவ்வளவு எளிதாக ஒரு பெண்ணைத் தொட்டுவிட முடியாது நண்பர்களே. “அவர்கள் தங்களுக்கான ஆதரவு என்னிடம் இருக்கிறது என்று நம்பினார்கள். அன்பின் வெளிப்பாடாகத்தான் அரவணைத் தேன். தாயும் குழந்தையும் அரவணைக்கும் அன்புதான் அங்கு நடந்தது. அதையும் விமர் சனம் செய்தீர்கள்,” என சினேகன் தெரிவித்துள்ளார்.

தனது தந்தையுடன் திரைப்பட பாடலாசிரியர் சினேகன்.