You are here

‘ஆக்டிவ் எஸ்ஜி’ பாலர் பள்ளி ஊட்டச்சத்து, உடற்பயிற்சி திட்டம்

விளையாட்டுகளுக்கான தேசிய பிரசார நடவடிக்கையான ‘ஆக்டிவ் எஸ்ஜி’ பாலர் பள்ளி குழந்தைகளுக்காக ஊட்டச்சத்து, உடற் பயிற்சித் திட்டத்தை ஏற்படுத்த தனியார் நிறுவனம் ஒன்றுடன் கூட்டு சேர்ந்து உள்ளது. ‘Nurture Kids’ எனப்படும் அந்தத் திட்டத்திற்காக ஃப்ரிஸ் லேண்ட் கேம்பினா ஏ‌ஷியா என் னும் பால்பொருள் நிறுவனத்துடன் அது பணியாற்றுகிறது. வீசுதல், வீசப்படுவதைப் பிடித் தல் போன்ற அடிப்படைத் திறன் களை வளர்க்கும் பல்வேறு வித மான நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ள எட்டு பாலர் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கானது இத்திட்டம். திட்டம் செயலுக்கு வந்தது முதல் பத்து வாரங்கள் கழித்து அதன் செயல்திறன் பரிசீலிக்கப் படும். எந்த வகையில் அது ஆற் றலுடன் செயல்படுத்தப்பட்டது என்பது கணக்கில் கொள்ளப்படும்.

புதிய முன்னோடித் திட்டத்தில் எட்டு பாலர் பள்ளிகள் பங்கேற்கின்றன. படம்: ஆக்டிவ்எஸ்ஜி, ஃப்ரிஸ்லேண்டகேம்பினா ஏ‌ஷியா