You are here

டிரம்ப்பிற்கு ஆதரவை உறுதிப்படுத்திய டில்லர்சன்

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சனுக்கும் இடை யில் உரசல் ஏற்பட்டுள்ள தாகக் கூறப்படும் வேளையில் அப்படி எதுவும் இல்லை என்பதை திரு டில்லர்சன் தெளிவுபடக் கூறியுள்ளார். அதனை நிரூபிக்கும் வகையில் திடீரென்று புதன்கிழமை செய்தி யாளர்கள் கூட்டத்தைக் கூட்டிய திரு டில்லர்சன், அதிபர் டிரம்ப்பிற்கான தமது ஆதரவை உறுதிப்படுத்தினார். அத்துடன் திரு டிரம்ப்பை அவர் புகழ்ந்தும் பேசினார். பதவி விலகும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் திரு டில்லர்சன் செய்தி யாளர்களிடம் கூறினார். “அதிபர் நியமித்ததன் பேரில் பணியாற்று கிறேன். எனது தேவை இருக்கும் வரை டிரம்ப் நிர்வாகத்தில் பணியாற்றுவேன்,” என்று டில்லர்சன் கூறினார்.

ஆனால் திரு டிரம்ப் பற்றி டில்லர்சன் கூறியதாக ஊடகங் களில் வெளிவந்த செய்தி பற்றி கேட்டபோது அவர் மறுப்பு தெரிவிக்கவில்லை. லாஸ் வேகஸ் தாக்குதல்: ‘காதலனின் திட்டம் பற்றி தெரியாது’ லாஸ் வேகஸ்: அமெரிக்கா வின் லாஸ் வேகஸ் நகரில் 58 பேரை சுட்டுக்கொன்ற ஸ்டீஃபன் பேடோக்கின் காதலி மரிலோ டேன்லி, தனது அன்பான காதலன் என்ன திட்டமிட்டுக் கொண்டிருந்தார் என்பது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார். ஸ்டீஃபன் பேடோக் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு உயிரை மாய்த்துக் கொள்வதற்குப் பதிலாக அங்கிருந்து தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்திருக்கலாம் என்றும் அமெரிக்க அதிகாரிகள் கூறினர். இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மக்கள் மீது அவன் கண்மூடித்தனமாக சுட்டதற்கு காரணம் என்னவாக இருக்கும்? அவனுக்கு உதவியாக யாரேனும் இருந்தனரா? என்ற விவரம் இன்னும் தெரியவில்லை. விசாரணை தொடர்ந்து நடந்துவருவதாக தகவல்கள் கூறுகின்றன.