You are here

முறிந்து போன நட்சத்திர காதல்

நடிகர் ஜெய்யும் நடிகை அஞ்சலியும் காதலிப்பதாக செய்தி வெளியிடாத ஊடகமே இல்லை. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியானது. அவ்வப்போது தங்களது சமூக வலைத்தளப் பக்கங்கள் மூலம் தாங்கள் காதலிப்பதை இருவரும் மறைமுகமாக வெளிப்படுத்தி வந்தனர். இந்நிலையில் யார் கண்பட்டதோ தெரியவில்லை. ஜெய், அஞ்சலி காதலில் விரிசல் ஏற்பட்டுள்ளதாம். இருவரும் இப்போது அறவே பேசிக் கொள்வதில்லை என்று கூறப்படுகிறது. காதல் முறிவுக்கான காரணம் என்னவென்பது தெரியவில்லை. ஆனால் இருவரும் பிரிந்துவிட்டது என்னவோ உண்மை என தமிழக சினிமா இணையதளம் ஒன்றில் செய்தி வெளியாகி உள்ளது. இதனால் இருவருக்கும் தனிப்பட்ட வகையில் மன உளைச்சல் இருக்கும் என்பது தெரிந்த சங்கதி தான். ஆனால் இந்தப் பிரிவு ஒரு படக்குழுவையும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது. ஜெய், அஞ்சலி இருவரும் சேர்ந்து நடித்த ‘பலூன்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. ஒரு படம் ஓட வேண்டும் என்றால், அப்படத்தில் நடிக்கும் நாயகனுக்கும் நாயகிக்கும் இடையில் காதல் பற்றிக் கொண்டதாக கிசுகிசு கிளப்பி விடுவார்கள்.

ஆனால் இங்கு நிஜத்திலேயே காதல் வசப்பட்ட ஜோடி, சரியாக பட வெளியீடு நேரத்தில் பிரிந்துவிட்டதாகக் கூறப்படு வதால் படக்குழுவினருக்கு தர்ம சங்கடம். படத்திற்கு எவ்வித வெட்டும் இன்றி யு/ஏ சான்றிதழ் வாங்கி யும் கூட படத்தை எவ்வாறு விளம் பரப்படுத்துவது எனும் தயக்கம் உள்ளதாம். பட வெளியீட்டின்போது இருவரையும் ஒன்றாக அழைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தலைகாட்ட வைக்கலாம் என்று நினைத் திருந்தார் களாம். அது நடக் குமா என்பதுதான் இப்போது எழுந் துள்ள சங்கடம். இருவரை யும் எப்படி யாவது பட விளம்பர நிகழ்ச்சிக ளுக்கு வர வைத்து விட வேண்டும் என ‘பலூன்’ படக்குழுவினர் மிகுந்த மும்முரத்துடன் செயல்பட்டு வருவதாகக் கேள்வி. அஞ்சலி வருவதற்கு வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படும் நிலையில், ஜெய் நிச்சயம் வர மாட்டார் என்று விவரமறிந்தவர்கள் சொல்கிறார்கள்.