You are here

அசுத்த நீரை குடிக்குமாறு ரயில் நிலைய அதிகாரியை வற்புறுத்திய பாஜகவினர்

  • படம்: தமிழக ஊடகம்

திருச்சி: தூய்மை இல்லாத தண்ணீரைக் குடிக்கச் சொல்லி திருச்சி ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டரை ஹெச்.ராஜா தலைமையிலான குழு கட்டாயப்படுத்தி யுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில் பயணிகள் வசதி மேம் பாட்டுக் குழுத் தலைவரான ஹெச்.ராஜா தலைமையில் குழு உறுப்பினர் ஆசிர்வாதம் ஆச்சாரி மற்றும் ரயில் பயணிகளின் வசதிகள் மேம்பாட்டு வாரியத்தின் 13 உறுப்பினர்களைக் கொண்ட குழு திருச்சி ரயில் நிலைய உட் கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்தது. 6ஆவது நடைமேடை யில் பயணிகளுக்கான குடிநீர்க் குழாயில் வந்த நீரை அவர்கள் ஆய்வு செய்தனர்.

அப்போது, குடிநீர் சுகாதார மற்ற முறையில் வந்ததைக் கவனித்த ஆய்வுக் குழுவினர், திருச்சி நிலைய மேலாளர் (ஸ்டே ஷன் மாஸ்டர்) ஸ்ரீராமை அருகில் அழைத்து அந்த நீரைக் குடிக்கு மாறு கூறினர். அந்தத் தண் ணீரைக் குடித்த ரயில் நிலைய மேலாளர் சட்டென அதை வெளி யில் துப்பினார். இதனால், ஆத் திரமடைந்த அந்தக் குழுவின் உறுப்பினர் இர்ஃபான் அகமது, நிலைய மேலாளர் ஸ்ரீராமின் தலையை அழுத்தியதுடன் அசுத்தமான குடிநீரைக் குடிக்கக் கட்டாயப் படுத்தினார். அதற்கு ஸ்ரீராம் உடன்பட மறுத்தார். சட்டென கோபமான ஆய்வுக் குழுவைச் சேர்ந்தவர்கள், “இது என்ன குடிநீரா? அல்லது கழி வறை நீரா?,” எனக் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து பதில் சொல்ல முடியாமல் அதிகாரி ஸ்ரீராம் திகைத்து நின்றார்.

ரயில் நிலைய அதிகாரியை அசுத்தமான நீரைக் குடிக்க வைத்த பாஜகவினர். படம்: தமிழக ஊடகம்