You are here

கிழக்கு சிரியாவில் ரஷ்ய விமானத் தாக்குதல்: 16 பேர் பலி

பெய்ரூட்: சிரியாவின் கிழக்குப் பகுதியில் ரஷ்யா மேற்கொண்ட விமானத் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 16 பேர் பலியாகி உள்ளனர். சிரியாவின் கிழக்குப் பகுதியின் ஒரு பகுதி ஐஎஸ் போராளிகளின் கட்டுப் பாட்டில் உள்ளது. அவர்களுக்கு சிரியப் படையின் நெருக்குதல் அதிகரித்து வருகிறது. அப்பகுதியில் போர்ச் சூழலில் இருந்து தப்பிக்கும் வகையில் அங்குள்ள பொதுமக்கள் அருகேயுள்ள அபு கமல் என்னும் கிராமத்திற்குச் செல்ல முனை கின்றனர். அந்தக் கிராமத்திற்குச் செல்ல அவர்கள் மிக நீளமான இயுப்ரேட்ஸ் என்னும் ஆற்றைக் கடக்க வேண்டும்.

அவ்வாறு கடக்கும்போது அவர்கள் கொல்லப் படுகின்றனர் என்று பிரிட்டனை தளமாகக் கொண்ட சிரியாவுக்கான மனித உரிமை கண்காணிப்புக் குழு தெரிவித்தது. சிரியாவின் ரக்கா பகுதியை இழந்த ஐஎஸ் போராளிகள் இப்போது அபு கமல் போன்ற புறநகர்ப் பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். சிரியாவில் அரசாங்கத்திற்கு எதிராக 2011 மார்ச்சில் கலவரம் வெடித்தது. அன்றிலிருந்து 330,000க்கும் அதிக மானோர் கொல்லப்பட்டுள்ளனர்.