You are here

வடகொரியாவை எதிர்கொள்ள ஆயத்தமாகிறது தென்கொரியா

  • அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் மைக் பொம்பியோ

வா‌ஷிங்டன்: அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு மாபெரும் மிரட்டலாக இருந்து வரும் வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணுவாயுத ஆற்றலை எதிர்கொள்ளும் வகையில் தென்கொரியா அதன் ஏவுகணைத் தொழில்நுட்பத்தை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளது. தற்போது தென்கொரியாவிடம் “ஹியுன்மூ IV” என்றழைக்கப்படும் சக்திவாய்ந்த ஏவுகணை உள்ளது. வடகொரியாவின் நிலவறையில் ரகசியமாக இயங்கி வரும் ராணுவத் தளபத்திய மையத்தையும் அந்நாட்டில் பதுக்கி வைக்கப் பட்டிருக்கும் ராணுவத் தளவாடங் களையும் ஒரே அடியில் துடைத் தொழிக்கும் ஆற்றலைக் கொண்ட தாக “ஹியுன்மூ IV” ஏவுகணையை மேம்படுத்த வேண்டும் என்று தென்கொரியா வின் உயர்மட்ட ராணுவக்குழு, அந்நாட்டு நாடாளு மன்றத்தைக் கேட்டுக்கொண்டுள் ளது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஆற்றலைக் கொண்ட ஏவுகணைத் தொழில்நுட்பத்துடன் தற்போது தென்கொரியாவிடம் உள்ள “ஹியுன்மூ IV” ஏவுகணைத் தொழில்நுட்பத்தை இணைத்து சக்திவாய்ந்த புதிய ஏவுகணையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் ராணுவம் தெரிவித் துள் ளது. அதன்மூலம் குறிப்பிட்ட இலக்கைத் துல்லியமாகத் தாக்க முடியும் எனவும் தென்கொரிய ராணுவம் கூறியுள்ளது.

அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் மைக் பொம்பியோ