You are here

ஆப்கான் பள்ளிவாசலில் நடந்த இரண்டு தற்கொலைத் தாக்குதலில் 60 பேர் மரணம்

  • படம்: ஏஎஃப்பி

காபூல்: ஆப்கானிஸ்தானில் இரு பள்ளிவாசல்களில் நேற்று முன்தினம் தனித்தனியே நடந்த தற்கொலைத் தாக்குதல்களில் சுமார் 60 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. ஆப்கான் தலைநகர் காபூலில் ‌ஷியா முஸ்லிம் பள்ளிவாசலில் நடந்த முதல் தாக்குதலில் பெண் களும் குழந்தைகளும் உட்பட குறைந்தது 39 பேர் மரணமடைந்த னர். 45 பேர் காயமடைந்தனர். வெள்ளிக்கிழமை மாலை தொழு கைக்குக் கூடியிருந்தவர்களின் மத்தியில் தற்கொலைத் தாக்குதல் காரன் குண்டை வெடிக்கச் செய் துள்ளான்.

இந்தத் தாக்குதலுக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்றாலும் பொதுவாக ‌ஷியா முஸ் லிம்களின் பள்ளிவாசலில் சன்னி முஸ்லிம்கள் நிறைந்த ஐஎஸ் இயக்கமே தாக்குதல் நடத்தி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வறுமை நிறைந்த கோர் பகுதி யில் உள்ள சன்னி முஸ்லிம் பள்ளிவாசலில் நடந்த இரண்டாவது தாக்குதலில் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததுடன், 10 பேர் காயம் அடைந்துள்ளதாக உள்துறை அமைச்சின் பேச்சாளர் நஜிப் டேனிஷ் குறிப்பிட்டுள்ளார்.

காபூலில் உள்ள இமாம் ஜமான் ‌ஷியா பள்ளிவாசலில் வெள்ளிக் கிழமை மாலை தொழுகையின்போது நடந்த தற்கொலைத் தாக்குதலுக்குப் பின் மக்கள் பார்வையிடுகின்றனர். பள்ளிவாசல் முழுதும் ரத்தத்தின் வாடை சூழ்ந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. படம்: ஏஎஃப்பி