You are here

நஜிப்: தனிப்பட்ட ஒதுக்கீடுகள் கூடாது

‘முஸ்லிம்களுக்கு மட்டும்’ தனி சலவையகப் பிரச்சினைக்கு எதி ரான கருத்துகளை வெளியிட் டுள்ள மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக், அத்தகைய தனிப்பட்ட ஒதுக்கீடுகள் தவறு என்று கூறியுள்ளார். “தனிப்பட்ட ஒதுக்கீடுகளில் எனக்கு நம்பிக்கையில்லை. முஸ் லிம்களுக்கு மட்டும் தனி சலவை யகம் இருக்கக்கூடாது. அது தவறு,” என்று கோலாலம்பூரில் நேற்று நடைபெற்ற மலேசிய சீன இளையர் மாநாட்டில் பேசியபோது திரு நஜிப் சொன்னார். நாட்டின் பன்முகச் சமுதாயத் தில் பிளவுகளை ஏற்படுத்தாத விதத்தில் மலேசியர்கள் தெரிவு களைக் கொண்டிருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார். “முஸ்லிம்களுக்கென தனிப் பட்ட நம்பிக்கைகள் உள்ளன. ஆனால், அவற்றை முஸ்லிம் அல்லாதவர்கள் மீது திணிக்க முடியாது,” என்று திரு நஜிப் சொன்னார்.