You are here

மேலும் பல போராளிகள் மலேசியாவில் எழக்கூடும்

  • படம்: தி ஸ்டார்

கோலாலம்பூர்: தீவிரவாதியாக மாறிய மலேசியாவின் விரிவுரையா ளர் மஹ்முட் அகமது கொல்லப் பட்டுவிட்டார் என்று பிலிப்பீன்ஸ் அரசாங்கம் உறுதிப்படுத்தியிருந் தாலும் மலேசியர்கள் நாட்டின் பாதுகாப்பில் மெத்தனமாக இருக் கக்கூடாது என்று அந்நாட்டுத் தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுதின் ஹுசேன் வலியுறுத்தியுள்ளார். காரணம், மஹ்முட் அகமது வின் இடத்தை நிரப்ப மேலும் பல போராளிகள் மலேசியாவில் எழுக் கூடும் என்றும் அவர் எச்சரித்தார். “மஹ்முட் அகமதுவின் மர ணத்தை பிலிப்பீன்ஸ் உறுதிப்படுத் தினாலும் மலேசியாவின் வேவுத் துறை அதை இன்னும் உறுதிப்ப டுத்தவில்லை,” என்று திரு ஹிஷா முதின் நேற்று முன்தினம் இரவு மலேசியத் தற்காப்பு அமைச்சு தலைமையகத்தில் நடைபெற்ற ‘தேசிய உருமாற்றம் 2050’ எனும் திட்டம் தொடர்பிலான கலந்துரை யாடலுக்குப் பிறகு செய்தியாளர்க ளிடம் பேசினார். “பிலிப்பீன்ஸ் நாட்டின் ஆக உயர்ந்த தலைமைத்துவத்திலி ருந்து உறுதி கிடைத்திருந்தாலும், நமது சொந்த வேவுத் துறையிட மிருந்து எவ்வித உறுதியும் இது வரை கிடைக்கவில்லை.

தீவிரவாதியாக மாறிய மலேசியா வின் விரிவுரையாளர் மஹ்முட் அகமது. படம்: தி ஸ்டார்