You are here

அமெரிக்காவில் அரிய அரசியல் ஐக்கியம்

  • படம்: ராய்ட்டர்ஸ்

அமெரிக்காவில் அண்மையில் பல சூறாவளிகள் பெரும் சேதத்தை ஏற் படுத்தி 100க்கும் அதிகமானோரை கொன்றுவிட்டன. அந்த இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட் டோருக்கு உதவ செப்டம்பர் மாதம் முதல் பெரிய அளவில் பேரிடர் நிவாரண இயக்கம் நடந்து வருகிறது. அந்த இயக்கத்தையொட்டி டெக்சஸ் மாநிலத்தில் ‘ஆழ்மன திலிருந்து’ என்ற இசை நிகழ்ச்சி நடந்தது. அதில் அமெ ரிக்காவின் முன்னாள் அதிபர் கள் ஐந்து பேர் கலந்துகொண்டு அந்த நிகழ்ச்சியை அரிய ஓர் அரசியல் ஐக்கிய நிகழ்ச்சியாக மாற்றினார்கள். பராக் ஒபாமா, ஜார்ஜ் எச் டபிள்யூ புஷ், பில் கிளிண்டன், ஜார்ஜ் டபிள்யூ புஷ், ஜிம்மி கார்ட்டர் ஆகிய முன்னாள் அதிபர்கள் அந்த ஒரு மணிநேர இசை நிகழ்ச்சி யில் கலந்துகொண்டார்கள். அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்த முன்னாள் அதிபர்களுக்கு காணொளி மூலம் நன்றி தெரி வித்தார்.

ஜிம்மி கார்ட்டர், ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ், பராக் ஒபாமா, ஜார்ஜ் டபிள்யூ. புஷ், பில் கிளிண்டன் ஆகிய முன்னாள் அதிபர்கள் பேரிடர் நிவாரண இசை நிகழ்ச்சி மேடையில் திரண்டனர். படம்: ராய்ட்டர்ஸ்