You are here

துப்புரவு ஊழியரை ரயில் தடத்தின் மீது தள்ளியவர் கைது

ஹாங்காங்கின் யுவென் லாங் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் துப்புரவாளர் ஒருவரை ரயில் தடத்தின் மீது தள்ளிவிட்டதற் காக 56 வயது ஆடவர் ஒருவரை போலிசார் கைதுசெய்துள்ளனர். நேற்று முன்தினம் காலை திருவாட்டி லியுங் என்று அறியப் படும் அந்தப் பெண் துப்புரவாளர் ரயில் நடைமேடை மீது நின்று ரயில் தடத்துக்கு அந்தப்புறத்தில் நின்றிருந்த மற்றொரு ஊழியரோடு உரையாடிக்கொண்டு இருந்தார். அப்போது, ஆடவர் ஒருவர் நடந்துசென்று அந்தப் பெண்ணைத் தனது வலது கையால் ரயில் தடத்தின் மீது தள்ளிவிட்ட பின்னர் மெதுவாக நடந்துசெல்வது காணொளியில் பதிவாகியுள்ளது. அதிர்ஷ்ட வசமாக அந்தச் சமயத்தில் ரயில் எதுவும் தடத்தில் செல்லவில்லை. சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் ஆடவரை போலிசார் கைது செய்தனர்.

ரயில் நடைமேடைமீது நின்றிருந்த துப்புரவு ஊழியரை ஆடவர் ஒருவர் தனது வலது கையால் ரயில் தடத்தின் மீது தள்ளிவிட்டு நடந்துசெல்வது காணொளியில் பதிவாகியுள்ளது. தடத்தின்மீது தள்ளி விடப்பட்ட பெண்ணுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. படம்: எல்லிஸ் குவோங்கின் ஃபேஸ்புக் காணொளி