You are here

அமெரிக்காவின் தடை: ஜகார்த்தா கேள்வி

  • ஜெனரல் காடோட் நுர் மாண்டியோ

ஜகார்த்தா: இந்தோனீசியா வின் ஆயுதப் படை தளபதியை அமெரிக்கா வினுள் நுழைய விடாமல் தடை விதித்ததற்கான காரணத்தை விளக்கக் கோரி அந்நாட்டு தலைமைச் செய லாளரைச் சந்தித்துப் பேச தன் தூதரை அனுப்ப இருப் பதாக இந்தோனீசிய வெளியுறவு அமைச்சர் ரெட்னோ மர்சுடி தெரிவித்தார். ஜெனரல் காடோட் நுர் மாண்டியோ அமெரிக்கா வுக்குப் செல்வதைத் தடை செய்ததாக இந்தோனீசிய ஆயுதப்படை பேச்சாளர் வுரியாண்டோ செய்தியாளர் களிடம் தெரிவித்தார். அ மெ ரி க் கா வி ன் கூட்டுத் தளபத்தியக் குழு வின் தலைவர் ஜெனரல் ஜோசஃப் டன்ஃபோர்டின் அழைப்பின் பேரில் வா‌ஷிங்டனில் இரு நாட்களாக நடைபெறும் தற்காப்புத் தலைவர்கள் இடம்பெறும் மாநாட்டில் கலந்துகொள்ள ஜெனரல் காத்தோட் நுர் மாண்டியோ புறப்பட்டார்.

“அமெரிக்க அரசாங் கத்திடமும் ஜகார்த்தாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திலும் நாங்கள் விளக்கம் கேட்டுள்ளோம். ஆனால் இதுவரையில் எந்த பதிலும் வரவில்லை” என இந்தோனீ சிய வெளியுறவு அமைச்சர் ரெட்னோ மார்சுடி கூறினார். இதன் தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தோனீசியாவுக்கான அமெரிக்கத் தூதர் ஜோசஃப் டனோவன் இந்தோனீசிய வெளியுறவு அமைச்சரிடம் வருத்தம் தெரிவித்துக் கொண்டார்.