You are here

வடகொரியாவுக்கு ஆசியான் வேண்டுகோள்

  • பிலிப்பீன்சில் தொடங்கிய கூட்டத்தில் ஆசியான் அமைச்சர்கள். படம் ஏஎஃப்பி

கிளார்க் ஃபிரிபோர்ட் (பிலிப்பீன்ஸ்): வடகொரியாவின் அணுவாயுதத் திட்ட மும் ஏவுகணைத் திட்டங்களும் கவலை யளிப்பதாகக் கூறிய ஆசியான் தற் காப்பு அமைச்சர்கள், தனிமையில் உள்ள வடகொரியா அனைத்துலகக் கடப்பாடுகளை மதித்து பேச்சு நடத்த முன்வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். பிலிப்பீன்சில் தொடங்கியுள்ள ஆசி யான் தற்காப்பு அமைச்சர்கள் கூட்டத் தில் அவர்கள் அவ்வாறு வேண்டுகோள் விடுத்தனர்.

நட்பு நாடாக விளங்கும் சீனா உட்பட அனைத்து நாடுகளின் கோரிக்கைகளையும் புறக்கணித்துள்ள வடகொரியா, அமெரிக்காவைத் தாக்கும் அணுவாயுத ஏவுகணை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் ஆசியான் தற்காப்பு அமைச்சர்கள் வெளியிட்ட கூட்டறிக் கையில் இவ்வட்டாரத்தில் அமைதி, நிலைத்தன்மையைக் கட்டிக்காப்பது அவ சியம் என்று குறிப்பிட்டனர். இதை யொட்டி கொரிய தீபகற்பத்தில் பதற் றத்தைத் தணிக்கும் வகையில் மீண்டும் பேச்சு வார்த்தை தொடங்கப்பட வேண் டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

பிலிப்பீன்சில் தொடங்கிய கூட்டத்தில் ஆசியான் அமைச்சர்கள். படம் ஏஎஃப்பி