You are here

மலேசியா: பயங்கரவாதத்தை எதிர்கொள்ள சிறப்புப் படைகள்

ஈப்போ: பயங்கரவாத மிரட்டல்களை இன்னும் திறம்பட கையாள மலேசிய போலிஸ் அதன் பொது இயக்கப் படையை வலுப்படுத்த உள்ளது. குறிப்பாக, ‘விஏடி69’ கமாண்டோ படை மற்றும் சிறப்பு நடவடிக்கைப் படையும் வலுப் படுத்தப்படும் என்று மலேசிய போலிஸ் தெரிவித்துள்ளது. சிறப்புப் படையின் ‘விஏடி69 மற்றும் 50’ பிரிவில் மேலும் 100 பேரை சேர்த்துகொள்ள போலிஸ் தலைவர் ஒப்புதல் அளித்ததாக உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு துறை இயக்குநர் ஆணையாளர் ஸுல்கிஃப்லி அப்துல்லா கூறியுள்ளார்.

சிறப்புப் படையோடு அவரது பிரிவும் இணைந்து ஐஎஸ் பிரிவு போன்ற பயங்கரவாத இயக்கங்கள் பற்றி முக்கிய தகவல்களைப் பெற்று அந்த இயக்கங்களை முடக்க முயற்சிகள் எடுக்கப்பட்ட தாகவும் அவர் கூறினார். போலிஸ் தலைவரின் ஒப்புதல் போலிசின் சிறப்புப் படையை வலுப் படுத்தி எந்த வித பயங்கரவாத மிரட்டல்களையும் திறம்பட கையாள ஆயத்த நிலையில் தங்களை வைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். பயங்கரவாதத்தைத் தவிர போதைப்பொருள், சிகரெட்டுகள், ஆயுதங்கள் கடத்தல் மற்றும் சட்டவிரோத குடியேறிகள் போன்ற எல்லை தாண்டிய குற்றங்களை சமாளிக்கவும் இந்தப் புதிய ஏற்பாடுகள் உதவும். புலனாய்வு மூலம் கிடைக்கும் தகவல்களால் சட்டத்தை மீறும் குற்றவாளிகளைச் சிறப்புப் படை சரிவர கண்டுபிடிக்க முடியும்.

புதிய மாற்றங்களோடு வலுப் படுத்தப்பட்ட சிறப்புப் படை முழுமையாக செயல்பாட்டிற்கு வந்தவுடன் கைது செய்யப்பட்டவர் களின் எண்ணிக்கை உயரும் என்று மேலும் கூறினார், திரு ஸுல்கிஃப்லி. சிறப்புப் பிரிவின் செயல்பாடு களும் விரிவுப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. அனைத்து மாற்றங்களும் அமல்படுத்தப்பட்டு செயல்பாடுகள் நிலைபெற்ற பிறகு கடல் மற்றும் நில எல்லைகளில் பாதுகாப்பு மேம்பாடு அடையும். முதலில், சிறப்புப் படையை விரிவாக்கம் செய்ய புதிய சேர்க்கைகளை தீவிரமாக மேற்கொள்ளவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. “இந்தப் பணிக்குத் தேர்ந்தெ டுக்கப்பட்டு அதன் பயிற்சியில் தேர்ச்சியடைய உடலளவிலும் மனதளவிலும் கடுமையான வலிமை தேவைப்படும். படையின் நடவடிக்கைகளில் அதிகமான மாணவர்களை ஈடுபடுத்துவது மூலம் நிறைய விண்ணப்பங்களைப் பெறமுடியும் என்றும் அவர் கூறினார்.