You are here

ஆசியானின் பாதுகாப்புக்குப் பரிந்துரைக்கப்பட்ட புதிய திட்டம்

ஜகார்த்தா: தீவிரவாதமும் பயங்கரவாதமும் ஆசிய வட்டா ரத்தில் அதிகரித்து ஆசியானின் ஆகப்பெரிய பாதுகாப்புப் பிரச்சி னையாக இருப்பதால் அதை சமா ளிக்கும் புதிய திட்டத்தை இந்தோ னீசியா பரிந்துரைத்துள்ளது. இந்த வட்டாரத்தின் ஆறு நாடுகள் இணைந்து ‘மினி= இண்டர்போல்’ எனும் திட்டம் மூலம் புலணாய்வு தகவல்களை ‘அவர் ஐஸ்’ எனும் முறையின் கீழ் பகிர்ந்துகொள்ள அந்தப் புதிய திட்டம் வழிசெய்யும். பிலிப்பீன்ஸின் கிளார்க் நகரில் நடந்துவரும் ஆசியான் தற்காப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் நேற்று முன்தினம் இந்தோனீசிய தற் காப்பு அமைச்சர் ரியாமிஸார்ட் ரியாகுடு அந்தப் புதிய திட்டத்தை முன்வைத்தார்.

மராவி நகரிலிருந்து வெளி நாட்டு போராளிகளை வெளி யேற்றுவதில் வெற்றி கண்ட பிலிப்பீன்ஸ் அரசாங்கத்தைப் பாராட்டிய அவர், ஐஎஸ் இயக் கத்தைச் சேர்ந்த போராளிகள் அண்டை நாடுகளில் தங்கள் தளங்களை அமைக்கும் சாத்தியம் இருப்பதை அவர் குறிப்பிட்டுப் பேசினார். இந்தோனீசியா, தாய்லாந்து, புருணை, சிங்கப்பூர், பிலிப்பீன்ஸ் ஆகிய ஆறு நாடுகள் இணைந்து பலதரப்புத் தொடர்பை வலுப் படுத்தினால் பயங்கரவாதிகளைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி பெறலாம் என்றும் அவர் தெரிவித்தார். “இந்தத் தடுப்பு முயற்சிகள் ஆசியான் நாடுகளில் இருந்து வரும் பயங்கரவாத இயக்கங்கள் பற்றிய ஆழ்ந்த தகவல்களை கிடைக்கச்செய்யும். அதனால், அந்த இயக்கங்கள் வளர்வதற்கு முன் அவற்றை அழிக்க முடியும்,” என்று அந்தக் கருத்தரங்கில் திரு ரியாமிஸார்ட் குறிப்பிட்டார்.