You are here

டிரம்ப்: மீண்டும் அகதிகளுக்கு அனுமதி

வா‌ஷிங்டன்: அமெரிக்காவுக்குள் மீண்டும் அகதிகள் நுழைவதற்கான அனுமதியை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வழங்கியுள்ளார். ஜனவரி மாதம் பதவி ஏற்றவுடன் டிரம்ப் புதிய அகதிகள் அமெரிக்காவுக்குள் வருவதற்கு தடை பிறப்பித்திருந்தார். அந்தத் தடையை இப்போது தகர்த்தாலும் குறிப்பிடப்படாத 11 நாடுகள் 90 நாட்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும். இனி வரும் அகதிகள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடாது என்பதற்காக பலத்த பாதுகாப்பு முறைகள் செயல்பாட்டில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அகதிகள் திட்டத்தின்கீழ் இப்போது 45,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது 30 ஆண்டுகளில் மிகக் குறைவான எண்ணிக்கையாகும்.