You are here

ஜிஎஸ்டியை நீக்கும் புதிய பட்ஜெட்: மலேசிய எதிர்க்கட்சி

கோலாலம்பூர்: மலேசியாவில் பொருள் சேவை வரியை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் 258,52 பில்லியன் ரிங்கிட்டுக்கான புதிய வரவுசெலவுத் திட்டம் ஒன்றை அடுத்த ஆண்டுக்கு அந்நாட்டின் முக்கிய எதிர்க் கட்சியான பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக் கட்சி பரிந்துரைத் துள்ளது. முன்னைய வரவு செலவுத் திட்டத்தைக் காட்டிலும் நாட்டின் மேம்பாட்டுக்கு இந்த வரவு செலவுத் திட்டத்தில் சற்றுக் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்ஜெட் ஏற்றுக்கொள்ளப்பட்டால் பொருள் சேவை வரியை முடிவுக்குக் கொண்டு வருவதோடு விரைவுச் சாலைக் கான தீர்வைக் கட்டணம் போன்றவற்றையும் முடிவுக்குக் கொண்டு வரலாம்.

அத்துடன் நிதி விரயம், ஊழல் போன்றவற்றைத் தவிர்க்கவும் முடியும் என்கிறது பக்கத்தான் ஹரப்பான். அத்துடன் குறைந்த வருமானக் குடும்பத் தைச் சேர்ந்த பிள்ளை களுக்கு அரசாங்கப் பல்கலைக் கழகங் களில் இலவசக் கல்வி வழங்க முடியும் என்றும் அக்கட்சி கூறியுள்ளது. பரிந்துரைக்கப்பட்டுள்ள பட்ஜெட்டில் 23% நிதி நாட்டின் மேம்பாட்டுக்காகவும் 77% நிதி செலவினங்களுக்காகவும் ஒதுக்கப்படும். இது முன்னைய பட்ஜெட்டில் மேம்பாட்டிற்கு 20% எனவும் செலவினங்களுக்கு 80% எனவும் உள்ளது.