You are here

பினாங்கு பஸ் விபத்து: 8 பேர் மரணம்; 42 பேர் காயம்

பட்டர்வொர்த்: மலேசியாவின் பினாங்கில் நேற்று முன்தினம் காலை இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் எட்டு பேர் மாண்டனர், 42 பேர் படுகாயம் அடைந்தனர். நால்வர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். பேருந்துகளின் ஓட்டுநர் கள் காயமின்றி உயிர் தப்பி னர். ஜூரு என்னுமிடத்தின் அருகே வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. மாண்ட எட்டுப் பேரும் பெண்கள். அவர்களில் ஏழு பேர் இந்தோனீசியாவைச் சேர்ந்தவர்கள், ஒருவர் மலே சியாவைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் தொடர்புடைய பேருந்துகளில் ஒன்று, நேப்பா ளத்தைச் சேர்ந்த ஒரு பெண் ணுடன் 39 இந்தோனீசியப் பெண்களை ஏற்றிக்கொண்டு பிராய் தொழில் பேட்டைப் பகுதியில் உள்ள சோனி இஎம்சிஎஸ் தொழிற்சாலை யை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்து இயந்தி ரத்தில் பழுது ஏற்பட்டதால் விரைவுச் சாலையின் ஓரத் தில் பேருந்து நிறுத்தப்பட்டது. அவ்வழியே வந்த இன் னொரு பேருந்து 17 மலே சியப் பெண்களை ஏற்றிக் கொண்டு நிறுத்தி வைக்கப் பட்டிருந்த பேருந்தின் பின் பகுதியில் மோத, இரண்டு பேருந்துகளும் விரைவுச் சாலையின் தடுப்புக் கம்பி களில் மோதியது.