You are here

சிங்கப்பூர்-அமெரிக்கா ஆலோசனை அமெரிக்க தேசிய பாதுகாப்புத் துறை

ஆலோசகர் ஹெச்.ஆர். மெக்மாஸ்டர் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கைச் சந்தித்தார். பயங்கரவாத மிரட்டல்கள், வடகொரியா வின் அணுவாயுதத் திட்டம் ஆகியன குறித்து அவர்கள் விவாதித்தனர். “இவ்வட்டாரத்தின் பயங்கரவாத மிரட் டல் குறித்து இருவரும் தங்களது கருத்து களைப் பகிர்ந்துகொண்டதோடு சட்ட விரோத அணுவாயுதச் சோதனை, கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஆகிய திட்டங்களை வடகொரியா தொடர்ந்து மேம்படுத்துவது தொடர்பாக தங்களது அக்கறைகளை வெளிப்படுத் தினர்,” என்று பிரதமர் அலுவலகம் தெரி வித்தது. ஆசிய பசிபிக் வட்டாரத்தில் தனது ஈடுபாட்டை வலுப்படுத்துவதில் அமெரிக்கா தனது கடப்பாட்டைத் தொடருவதன் அவ சியத்தை இருவரும் ஒப்புக்கொண்ட தாகவும் பிரதமர் அலுவலகம் கூறியது.

முன்னதாக, அதிபர் டோனல்ட் டிரம்பும் பிரதமர் லீயும் சந்தித்தபோது இருதரப்பு பாதுகாப்பு விவகாரங்கள் முக்கியமாக எடுத்துக்கொள்ளப்பட்டன. அண்மையில் நடந்த அச்சந்திப்பு தொடர்பாக வெள்ளை மாளிகையும் சிங்கப்பூர் பிரதமர் அலுவலகமும் கூட்டாக அறிக்கை வெளியிட்டன. இரு நாடுகளின் அமைச்சரவை உறுப்பினர்களும் இச்சந்திப் பில் பங்கேற்றனர். தற்காப்பு, பாதுகாப்பு, பொருளியல் ஆகிய அம்சங்களில் பரஸ்பர பயனளிக்கும் ஒத்துழைப்பின் அடிப்படையிலான இரு தரப்பு பங்காளித்துவத்தை வலுப்படுத்த தலைவர்கள் உறுதிபூண்டனர். ஐஎஸ்ஐஎஸ் மிரட்டலை முறியடிப்பதற் கான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். ஐஎஸ் ஐஎஸ் மிரட்டலை வீழ்த்துவதற்கான அனைத்துலகக் கூட்டணியில் சிங்கப்பூர் அதன் தற்போதைய பங்களிப்பை நீட்டிக்கும் கடப்பாட்டை அதிபர் டிரம்ப் வர வேற்றுள்ளார். அடுத்த ஆண்டிலும் சிங்கப்பூர் தனது ஒத்துழைப்பைத் தொடரும் என்று பிரதமர் லீ திங்கட்கிழமை தெரிவித்திருந்தார்.