You are here

இரண்டு வயது மகன் முன்பு பெண் சுட்டுக் கொலை

  • படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: கடந்த மூன்று நாட்களில் டெல்லியின் வெவ்வேறு பகுதிகளில் ஐந்து கொலைகள் நடைபெற்றுள்ளன. ஷாலிமார் பாக், கிருஷ்ணா நகர், நியூ உஸ்மான்புர் ஆகிய இடங்களில் துப்பாக்கிச் சூடு சம் பவங்களும் நடைபெற்றுள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஷாலிமார் பாக்கில் இளம் பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். டெல்லியின் பகர்கஞ்ச் பகுதியில் வசிக்கும் தொழிலதிபர் பங்கஜ் மெஹ்ரா மனைவி பிரியாவு டனும் இரண்டு வயது மகனுடனும் காரில் வீடு திரும்பிக்கொண்டி ருந்தார். அப்போது மற்றொரு காரி லிருந்து இறங்கிய மர்ம நபர்கள் பங்கஜை நோக்கி சரமாரியாகச் சுட்டனர். இதில் இளம்பெண் பிரியா மீது குண்டு பாய்ந்தது. பங்கஜும் அவருடைய இரண்டு வயது மகனும் காயமின்றித் தப் பினர். உயிருக்கு ஆபத்தான நிலை யில் பிரியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஆனால் அவர் உயிர்பிழைக்கவில்லை. வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாததால் பங்கஜை சில மர்ம நபர்கள் சுட்டுக்கொல்ல முயற்சி செய்ததாகக் கூறப்படு கிறது. ஆனால் பிரியாவுக்கு உடனடியாக சிகிச்சை வழங்கப் பட்டிருந்தால் அவர் உயிர் பிழைத் திருக்கலாம் என்று குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். காவல்துறையினர் தங்களு டைய எல்லைக்கு உட்பட்டு இல் லாததால் வழக்குப் பதிவு செய்ய மறுத்தனர். இதனால் மேலும் காலதாமதம் ஏற்பட்டதாகக் கூறப் படுகிறது. டெல்லியில் மூன்று நாட்களில் நடைபெற்றுள்ள 5வது கொலை இது. கடந்த திங்கட் கிழமை இதே போன்ற இரண்டு வெவ்வேறு சம்பவங் களில் இரண்டு ஆடவர்கள் கொல்லப் பட்டனர். அடுத்தடுத்த சம்பவங் களில் 23 வயது ரோஹிட் பாலும் 41 வயது ஜாஃபரும் கொல்லப் பட்டனர்.

பங்கஜ், அவரது மனைவி பிரியா. படம்: இந்திய ஊடகம்