You are here

சலாவுதீன் வீட்டில் ஆவணங்கள் சிக்கின

தீவிரவாதத்துக்கு நிதியுதவி செய்யும் வகையில் பணப் பரிமாற்றம் செய்த வழக்கில் தீவிரவாதி சையது சலாவுதீ னின் வீட்டை வியாழக்கிழமை அன்று தேசியப் புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். காஷ்மீரின் புட்காம் மாவட் டத்தில் உள்ள சலாவுதீன் வீட்டில் வியாழக்கிழமை காலை சோதனை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான கைபேசிகள், மடி கணினிகள், ஹார்ட் டிஸ்கு கள், முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக என்ஐஏ செய் தித் தொடர்பாளர் கூறினார்.