You are here

தைப்பே-பெய்ஜிங் உறவை மேம்படுத்த தைவான் அதிபர் அழைப்பு

தைப்பே: தைப்பேயும் பெய்ஜிங்கும் எதிரெதிராகச் செயல்படுவதைக் கைவிட்டு கலந்துரையாடி உறவை மேம்படுத்துவதில் ஈடுபட வேண்டும் என்று தைவான் அதிபர் சாய் கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த ஆண்டு ஜனநாயக முன்னேற்றக் கட்சிக்கு தலைமை வகிக்கும் சாய், அதிபர் பொறுப்பு ஏற்றதிலிருந்து சீனாவுக்கும் தைவானுக்கும் இடையிலான உறவு மோசமைடைந்தது. பெய்ஜிங் விரும்பாத தைவானின் சுதந்திரக் கோரிக் கைக்கு ஆதரவாக சாய் செயல்படு கிறார் என்று சீனா சந்தேகிக்கிறது. இந்நிலையில் அதிபர் சாய், இரு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவை மேம்படுத்த அழைப்பு விடுத்துள்ளார்.

புதன்கிழமை அன்று சீன அதிபர் ஸி ஜின்பிங் தலைமையில் புதிய ஆட்சி மன்றக் குழுவினர் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதிபர் சாயின் கருத்து வெளியாகியிருக்கிறது. சீனாவில் நடைபெற்ற ஒரு வார கால கம்யூனிஸ்ட் கட்சிக் கூட் டத்தின் தொடக்கத்தில் பேசிய அதிபர் ஸி ஜின்பிங், “தைவானின் சுதந்திரத்தை இலக்காகக் கொண்ட நடவடிக்கைகள் எத்த கைய வடிவில் வந்தாலும் தோற் கடிக்கப்படும்,” என்றார். மேலும் தொடர்ந்து பேசிய திரு ஸி, சீனாவின் எந்தவொரு பகுதி யையும் பிரிக்கும் யாரையும் எந்த நிறுவனத்தையும் எந்தவொரு அர சியல் கட்சியையும் எந்த நேரத் திலும் எந்த வடிவில் வந்தாலும் அனுமதிக்க மாட்டோம் என்று சூளுரைத்துள்ளார். இந்த நிலை யில் தைவான் அதிபர் அமைதிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.