You are here

கிம் ஜோங் நாம் கொலை; நால்வருக்குத் தொடர்பு

ஷா ஆலம்: வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரரான கிம் ஜோங் நாம் கொலையில் மேலும் நால்வருக்குத் தொடர்பிருக்கலாம் என்று விசாரணையில் தெரிய வந்துள் ளது. கோலாலம்பூர் விமான நிலையத்தில் காத்திருந்த கிம் ஜோங் நாம் முகத்தின் மீது உயிரை உடனே பறிக்கும் கொடிய நச்சுகலந்த துணியை இரண்டு பெண்கள் தேய்த்தனர். அடுத்த சில நிமிடங்களில் கிம் ஜோங் நாம் இறந்தார். அந்த சம்பவத்தில் மேலும் நால்வருக்குத் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. நால்வரும் தங்களுடைய உடை, தோற்றத்தை மாற்றிக் கொண்டனர் என்று நேற்று நீதி மன்றத்தில் சாட்சியம் அளித்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விசாரணை அதிகாரியான வான் அஸிருல் நிஸாம் சீ வான் அஸிஸ் சாட்சியம் அளித்தபோது நான்கு சந்தேக நபர்களைக் காட்டும் காணொளிக் காட்சிகளும் திரையிடப்பட்டன. தங்களைக் கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக அவர்கள் தோற் றத்தை மாற்றிக்கொண்டனர் என்றும் அவர் கூறினார். கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி கோலாலம்பூர் 2வது விமான நிலையத்தில் கிம் ஜோங் நாம் தாக்கப்பட்டார். இதன் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களிடம் நீதிமன்ற விசார ணை நடைபெற்று வருகிறது. ஒருவர், இந்தோனீசியாவைச் சேர்ந்தவர். மற்றொருவர் வியட் னாமிய பெண். இவர்களுடன் சேர்ந்து அடையாளம் காணப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் ஈடு பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப் படுகிறது.