You are here

நிலச்சரிவு: பினாங்கு முதல்வர் உத்தரவு

ஜார்ஜ்டவுன்: தஞ்சுங் பூங்காவில் நிகழ்ந்த நிலச்சரிவு விவகாரத்தில் வீடு வாங்கிய அனைவரையும் நேரில் சந்திக்க வேண்டும் என்று பினங்கு முதல்வர் லிம் குவான் எங் மேம்பாட்டாளருக்கு உத்தர விட்டுள்ளார். ஒரு வாரத்தில் வீடு வாங்கிய வர்களை சந்திக்கவில்லையென் றால் அரசாங்கமே நேரடியாக தலையிடும் என்றும் அவர் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை கட்டு மானத் தளத்தில் நடைபெற்ற நிலச் சரிவில் 11 பேர் மாண்டனர்.

இதையடுத்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத் தில் முதல்வர் விவரித்தார். நிலச்சொத்து மேம்பாட்டாளரை அவர் பலமுறை எச்சரித்தார். சென்ற புதன்கிழமை தாமான் ஸ்ரீ பூங்கா கட்டுமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் நிலச் சரிவுக்கான காரணத்தைக் கண்டு பிடிக்க சுயேச்சை பொறியாளர் ஆலோசனைக் குழுவை நிய மித்துள்ளதாகத் தெரிவித்தது. முன்னதாக நிலச்சரிவுக்குப் பிறகு தாங்கள் வாங்கிய வீடு என்னவாகும் என்று வீடு வாங்கியவர்கள் கவலை தெரிவித் திருந்தனர். இதன் காரணமாக பினாங்கு முதல்வர் நிலச்சொத்து மேம்பாட்டாளருக்கு இத்தகைய உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.