You are here

தமாகா: சிறுமைப்படுத்தும் வசனங்கள் வேண்டாம்

சென்னை: உண்மை தெரியாமல் திரைப்படங்களில் வசனங்களை எழுதுவதுதான் பிரச்சினைக்கு மூலக்காரணம் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் பி.எஸ்.ஞான தேசிகன் கூறியுள்ளார். நாம் வாழ்கிற நாட்டை சிறுமைப்படுத்துகிற வசனங்கள் திரைப்படங்களில் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிக்கை ஒன்றில் அவர் வலியுறுத்தி உள்ளார். “‘மெர்சல்’ திரைப்படத்தில் 120 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவை, சென்னை அளவே உள்ள 57 லட்சத்துக்கும் குறைவான மக் கள் தொகை கொண்ட சிங்கப்பூருடன் சம்பந்தப்படுத்தி பேசப் பட்டு இருக்கிற வசனம் தவிர்க்கப்பட்டு இருக்கலாம்.

“இதில் வசனம் எழுதிய வரைத் தான் சுட்டிக்காட்ட முடி யுமே தவிர பேசுகிற நடிகரை அல்ல. இத்தகைய வசனங்களை பேசுவதற்கு நடிகர்களும் மறுக்க வேண்டும்,” என்று ஞானதேசிகன் தெரிவித்துள் ளார். இந்தியனாக, இந்தியாவின் வளர்ச்சியில் பெருமை கொள் வோம் என்றும், இந்தப் பிரச்சி னைக்கு இத்துடன் அனைவரும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார். சிங்கப்பூரில் எல்லா ஏழை மக்களுக்கும் இலவச மருத்துவ வசதி கிடையாது என்றும் ஞானதேசிகன் தமது அறிக்கை யில் குறிப்பிட்டுள்ளார்.