You are here

புதுச்சேரி பல்கலை துணைவேந்தர் உட்பட நால்வர் மீது வழக்குப்பதிவு

புதுவை: தமது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி தனக்கு வேண்டியவர்களுக்கு முறைகேடாக பதவி வழங்கியதாக புதுச்சேரி பல்கலைக்கழக துணை வேந்தர் மீது புகார் எழுந்துள்ளது. இதையடுத்து துணைவேந்தர் அனீஷா ப‌ஷீர்கான் உள்ளிட்ட நான்கு ஊழியர்கள் மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற உதவி பதிவாளர் பாலசுப்பிரமணி இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அவரது மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் உரிய விசாரணை நடத்துமாறு புதுச்சேரி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. விசாரணையை அடுத்து துணை வேந்தர் மீது வழக்குப் பதிவானது. மேலும் மூன்று ஊழியர்களும் வழக்கை எதிர்கொண்டுள்ளனர். இவர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் போலிசார் தெரிவித்துள்ளனர்.