You are here

மேட்டிஸ்: வடகொரியாவுக்கு எதிராகப் போர் தொடுப்பது எங்கள் இலக்கல்ல

பான்முன்ஜோம்: வடகொரியாவுக்கு எதிராகப் போர் தொடுப்பது அமெரிக்காவின் இலக்கு அல்ல என்று அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் தெரி வித்துள்ளார். தென்கொரியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கும் திரு மேட்டிஸ் தென்கொரியாவையும் வடகொரியாவையும் பிரிக்கும் ராணுவமற்ற எல்லைப் பகுதியை நேற்று பார்வையிட்டார். அவருடன் தென்கொரியாவின் தற்காப்பு அமைச்சர் சோங் யங் மூவும் இருந்தார். துவண்டுவிடாத, வலிமைமிக்க மனப்பான்மையுடன் அமைதியைத் தற்காக்க அமெரிக்காவும் தென் கொரியாவும் தொடர்ந்து போ ராடும் என்று திரு சோங் குறிப் பிட்டார். தென்கொரியாவுடன் வடகொ ரியா கூடிய விரைவில் பேச்சுவார்த் தைக்குத் திரும்பவேண்டும் என்று திரு சோங் கூறினார். வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் அணுவாயுதத் திட்டத்தைத் தடுத்து நிறுத்துவதே அமெரிக்காவின் நோக்கம் என்று திரு மேட்டிஸ் கூறினார். “வடகொரியாவின் செயல் பாடுகள் வட்டார, உலகளாவிய பாதுகாப்பை மிரட்டுகின்றன.

ஐநா பாதுகாப்பு மன்றம் எழுப்பியுள்ள கண்டனக் குரலையும் வடகொரியா புறக்கணித்து வருகிறது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் தெரி வித்துள்ளது போல அமெரிக்கா வின் இலக்கு போர் புரிவது அல்ல. கொரிய தீபகற்பத்தை அணுவாயுதம் இல்லாத வட்டார மாக்குவதே எங்களது குறிக் கோள்,” என்றார் திரு மேட்டிஸ். பெருத்த சேதம் விளைவிக்கும் அளவில் மற்ற நாடுகளைத் தாக்கப்போவதாக அடிக்கடி மிரட்டும் பழக்கத்தை வடகொரியா நிறுத்தவேண்டும் என்று திரு மேட்டிஸ் கேட்டுக்கொண்டார். வடகொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான வேற்றுமையை வெளிச்சம் போட்டு காட்டவே ராணுவமற்ற எல்லைப் பகுதிக்குப் பயணம் மேற் கொண்டதாகத் திரு மேட்டிஸ் செய்தியாளர்களிடம் கூறினார். தென்கொரியாவைத் துடிப்பு மிக்க ஜனநாயக நாடு என்று வர்ணித்தார் திரு மேட்டிஸ். அந்த நாட்டில் மக்கள் சுதந்திரமாக உள்ளனர் என்பதை அவர் தெரி வித்தார். மாறாக, மக்களின் சுதந் திரத்தை ஒடுக்கும் சர்வாதிகார நாடாக வடகொரியா திகழ்வதாக திரு மேட்டிஸ் கூறினார்.