You are here

‘தனிப்பட்ட ஒருவரால் தாக்குதல் நடத்தப்படலாம்’

மணிலா: மராவி நகரில் பலிப்பீன்ஸ் ராணுவத்திடம் தோல்வி அடைந்த தீவிரவாதிகள், தனிநபர் தாக்குதல் அணுகுமுறையை கையாளக்கூடும் என்று பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே அச்சம் தெரிவித்துள்ளார். பயங்கரவாதம் ஒரு தொடர் பிரச்சினையாக இருக்கும் என்று தெரிவித்த அதிபர் டுட்டர்டே, அதை வெறும் ஐந்திலிருந்து ஏழு ஆண்டுகளில் முற்றிலும் அழித்துவிட முடியாது என்று கூறினார். “தனிநபர்களைப் பயன்படுத்தி தாக்குதல்கள் நடத்தும் உத்தியைப் பயங்கரவாதிகள் மீண்டும் கை யாளக்கூடும் என நான் அஞ்சு கிறேன். மராவியில் பெரிய அளவி லான வன்முறையில் இறங்கி அவர்கள் தோற்றுள்ளனர். எனவே, தனிநபரை வைத்து அவர்கள் வன்முறையில் இறங்கும் ஆபத்து உள்ளது. உதாரணத்துக்கு, கனரக வாகனங்களைப் பலர் மீது மோதச் செய்யக்கூடும்,” என்று பிலிப்பீன்ஸ் நிபுணர் உச்சநிலை மாநாட்டில் திரு டுட்டர்டே தெரிவித்தார்.

மராவி நகரை முற்றுகையிட்டிருந்த பயங்கரவாதி களுக்கும் பலிப்பீன்ஸ் ராணுவத் துக்கும் இடையே கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்குக் கடுமை யான சண்டை நிலவியது. ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர் புடைய பயங்கரவாதக் குழுக்களின் தலைவர்களும் சண்டையில் ஈடுபட்ட மற்ற பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதை அடுத்து சண்டை ஒரு முடிவுக்கு வந்தது. பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த மராவி நகரை பிலிப்பீன்ஸ் ராணுவம் அண்மையில் மீட்டது. இந்நிலையில், தொடர்ந்து விழிப்புடன் இருக்கும்படி பிலிப் பீன்ஸ் மக்களை அதிபர் டுட்டர்டே கேட்டுக்கொண்டுள்ளார். பயங்கர வாதம் பிலிப்பீன்ஸில் மட்டுமல்லாது உலகின் மற்ற பகுதிகளிலும் பிரச்சினையாக இருந்து வருவதை அவர் சுட்டினார். “பதிலடி கொடுப்பது, பழி தீர்ப்பது ஆகியவை கற்பனைக் கதையல்ல. இன்றைய உலகம் மிகவும் ஆபத்தானது என்பதை உணரவேண்டும். தற்போது சுற்றுப்பயணிகளுக்கு உலகிலேயே மிகவும் பாதுகாப்பான இடம் தென் அமெரிக்காதான். ஐரோப்பாவுக்குச் செல்வது மிகவும் அபாயகரமானது. தனிநபரால் தாக்குதல் நடத்தப் படுமா அல்லது வெடிப்புச் சம்பவங் கள் நிகழுமா என்பது தெரியாது.