You are here

மலேசியாவின் தேர்தல் பட்ஜெட்

மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் அடுத்த ஆண்டிற்கான செலவி னத்தை 7.5 விழுக்காடு உயர்த்த இருக்கிறார். அந்தச் செலவுகளில் பெரும்பாலானவை உதவிமானிய திட்டங்களுக்கும் சமூக உதவித் திட்டங்களுக்கும் உரியனவாக இருக்கும் என்று தெரிய வந்துள் ளது. மலேசிய அரசாங்கத்தின் 2018ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையை (பட்ஜெட்) நேற்று பிற்பகலில் பிரதமர் நஜிப் (படம்) நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் மலேசிய அரசாங் கம் பொதுத் தேர்தலைச் சந்தித் தாக வேண்டிய சூழ்நிலையில் அதிக உதவிகள் நிறைந்த பட்ஜெட் உரையாக அது கருதப் பட்டது. படிப்படியாக உயர்ந்துவரும் வாழ்க்கைச் செலவினத்தைத் தணிக்கும் வகையில் பல்வேறு உதவித் திட்டங்களை மலேசிய மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அரசாங்க நிறுவனங்களில் நிதி மோசடி மற்றும் தவறான நிதி நிர்வாகம் போன்ற குற்றச் சாட்டுகளால், ஆளும் அம்னோ கட்சிக்கு பெரும் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அந்தக் களங்கத்தைத் துடைக்கும் வகை யில் நலத் திட்டங்கள் அறிவிக்கப் படக்கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. நிதி அமைச்சருமான திரு நஜிப், செலவினங்களை உயர்த் தும் அதே வேளையில் நிதிப் பற் றாக்குறையை 3 விழுக்காட்டிலி ருந்து 2.8 விழுக்காட்டுக்குக் குறைக்கப்படும் என்று தெரிவித் தார். எதிர்பார்ப்புகளைக் கடந்து பொருளியல் முன்னேறியதால் பற்றாக்குறை குறைந்ததாக அவர் குறிப்பிட்டார். “உலக நிலவரம் சவால்களை எதிர்நோக்கிய போதிலும் இந்த ஆண்டில் பொருளியல் 5.2 விழுக் காடு முதல் 5.7 வரை வளரும். இந்த வளர்ச்சி 4.3 விழுக்காடு முதல் 4.8 விழுக்காடு வரையில் இருக்கும். மார்ச் மாதத்தில் முன் னுரைக்கப்பட்டதைக் காட்டிலும் பொருளியல் நல்ல நிலையில் வளர்ச்சி பெறும்,” என்றார் திரு நஜிப்.